பக்கம்:மு. வ. வின் சிந்தனை வளம்.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர். சி.பா. - - 39

னிலையில் கொண்டுபோய் நிறுத்துகிறார்கள். அரசன் அவளுக்குத் தண்டனை கொடுக்கிறான். அவையிலுள்ள சான்றோர்கள் அவளுக்காகப் பரிந்துபேசுகிறார்கள். அத் தண்டனைக்குப் பதிலாக அப் பெண்ணின் தந்தை அவள் எடைக்கு எடை பொற்பாவையோடு எண்பத்தொரு ஆண் யானைகளையும் கொடுப்பதற்கு முன்வந்ததையும் ஏற்றுக் கொள்ளாது, அந்தப் பெண்ணைக் கொலை செய்த நன்ன னைப் போல, நீங்காத நரகத்தில் தன் அன்னையும் துன் புறுவாளாக என்று கூறுவதாக அமைந்துள்ளது. இதையே பெண்கொலை புரிந்த நன்னன் போல’ என்று சொல் கிறார்.

அந்தக் காலத்திலே நீதிக்குப் பெயர் பெற்றவர்கள் கோசர்கள். அந்தக் கோசர்கள் ஒரு குறிப்பிட்ட பொது இடத்திலே நான்கு பேர்-ஊருக்கு வெளியிலே ஆல மரத்தி னடியிலிருந்து நீதி சொல்வார்கள். அவர்கள் அந்தக் குறிப் பிட்ட இடத்திற்கு வந்தவுடனே அவர்களோடு வந்திருப்ப வர்கள் கொம்பு ஊதி ஒலி எழுப்புவார்கள். அதனைக்கேட்டு அனைவரும் வருவார்கள். அவர்கள் ஒரே ஒரு சொல் மட்டுமே சொல்வார்கள். ஒரு சொல் சொல்லிவிட்டு அடுத்த ஊருக்குப் போய்விடுவார்கள். அந்த ஒன்று மொழிக் கோசர்கள் வந்து தங்கிய இடம் கோசமுத்துார்’ என்றானது. அது தற்பொழுது கோயமுத்துார் என்று ஆகியுள்ளது. இவ்வாறு இரா. இராகவையங்கார் அவர்கள் தாம் எழுதிய கோசர் ஒர் என்ற சிற்றா ராய்ச்சி என்ற நூலிலே எழுதியிருக்கிறார். அசோகருடைய கல்வெட்டு இவர்களைச் ‘சத்தியபுத்திரர்’ என்று பேசுகின்றது. அந்தச் சத்திய புத்திரர்கள் இந்தக் கோசர்க ளாகத்தான் இருக்கவேண்டுமென்று ஆராய்ச்சிகள் சொல் சின்றன. அந்தக் கோசர்கள், பெண் கொலை புரிந்த