பக்கம்:மு. வ. வின் சிந்தனை வளம்.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 டாக்டர். மு.வ.வின் சிந்தனை வளம்

நன்னனைத் தண்டிக்கவேண்டுமென முடிவெடுக்கிறார்கள். இக் கோசர்கள் பின்னாளில் நன்னனின் அந்த மாங்கவும் தந்த மரத்தையே-நாட்டினுடைய காவல் மரத்தையே வெட்டி விடுகிறார்கள். காவல் மரம் என்று சொன்னால் அதனை அரசனைப் போல மதிக்கவேண்டியது மக்கள் கடமையாகும். o

“. . . . . . . . . . . . . . . . .................கன்னன்

நறுமா கொன்று காட்டிற் போகிய ஒன்றுமொழிக் கோசர் போல வன்கட் சூழ்ச்சியும் வேண்டுமால் சிறிதே”

-குறுந்தொகை: 73

இப்படிப்பட்ட ஒரு புரட்சியை நாம் காணுமாறு டாக்டர் மு.வ. அவர்கள் தம்முடைய முதல் நூல் செந்தாமரை”யி லேயே எடுத்துக்காட்டியுள்ளார்கள்.

புரட்சியான கருத்துகளை முதல் நூல்லிலேயே வைத்து எழுதியுள்ளார் டாக்டர் மு.வ. என்பது விளங்கும்.

கள்ளோ? காவியமோ? நாவல் ஒரு மிகப் பெரிய புரட்சியை-குடும்பப் புரட்சியைக் செய்கின்ற நாவல் ஆகும். இந்நூல் வெளிவந்தபோது அதனைப் படித்து விட்டுப் பல பெண்கள் பாராட்டிக் கடிதம் எழுதியிருக் கிறார்கள். கல்வியில் உயர்ந்த ஒரு பெண்ணும். கல்வியில் குறைந்த ஒர் ஆணும் ஒற்றுமையாகக் குடும்பம் -க்க உதவியது “கள்ளோ காவியமோ” தான் என்று அக் கடிதத் தில் கண் டிருந்தது. ஒரு வீட்டு வேலைக்காரியை மணந் தான் ஒர் இளைஞன். அந்தப் பெண் நல்ல பண்புடைய வள் என்று கருதுகின்றான். அவள் பெயர் மங்கை. நல்ல பண்புள்ள ஒரு பெண்ணின் பெயரை மங்கை என்று பெயந்