பக்கம்:மு. வ. வின் சிந்தனை வளம்.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர். சி.பா. 41,

வைக்கக் காரணம் என்னவென்றால், அவருக்குப் பிடித்த பெயர் புனிதவதி, திலகவதி, மங்கையர்க்கரசி என்பன

பன்பாட்டை-தமிழ்ச் சமயத்தை மீட்டுக்கொடுத்தார்கள் என்பது டாக்டர் மு.வ. வினுடைய அசைக்கமுடியாத நம்பிக்கை. இந்த மூன்றுபேரும் உறுதியாக இருக்க வில்லை என்று சொன்னால் நம்முடைய தமிழ் இன்றைக்கு இருந்திருக்காது என்று சொல்வார்கள்.

மங்கை’ என்ற பாத்திரம் வீட்டு வேலைக்காரி, அவளுடைய நற்பண்புகள் அந்த வீட்டுக்காரருடைய பிள்ளை அருளப்பனுக்குப் பிடித்து விடுவதனால் அவன், அவளைத் திருமணம் செய்துகொள்கிறான். ஆனால், சிக்கல் எங்கே உண்டாகின்றது? ஒர் இரக்கத்தின்பால் அவன் அவளைத் திருமணம் செய்து கொண்டானோ? என்கிற ஒரு நிலையை அவர் நாவலின் பிற்பகுதியில் எடுத்துக்காட்டுகின்றார்.

பல ஆண்டுகள் மாதவியோடு மகிழ்ந்து வாழ்ந்தவன் கோவலன்,

“ஆடல் மகளே யாதலின் ஆயிழை

பாடுபெற் றனளைம் அப்பைந்தொடி...’

இப்படிப்பட்ட ஒர் எண்ணம் அவனுடைய உள்ளத்தின் ஆழத்தில் இருத்திருக்கின்ற காரணத்தினாலேதான் அப்படி அவன் சொல்லியிருக்கிறான். அவனுடைய உள்ளத்தின் ஆழத்திலே அது இல்லை என்று சொன்னால் இப்படிப்பட்ட ஒரு சொல்லை அவன் சொல்லியிருக்க மாட்டான். அதனாலே அவனுடைய அடிமனத்தின் ஆழத்தில் அந்தக் கருத்து இருந்திருக்கிறது. ஆடல்