பக்கம்:மு. வ. வின் சிந்தனை வளம்.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*

டாக்டர். சி.பா. 43

யிடம் போனாலும் காவிரி அவனைக் கோபித்துக் கொள்ள வில்லை. அதுபோல, கண்ணகிக்கு உரிமையுடைய கோவலன் இப்பொழுது கங்கையாகிய மாதவியைக் கொண்டு விட்டான். அப்படி மாதவியைக் கொண்டாலும், கண்ணகி அவனோடு ஊடவில்லை. இதைப் பின்னாளில் மாதவியைக் கண்ணகி கொஞ்சம் கூடக் கோபித்துக் கொள்ளவில்லை என்று தனது வஞ்சிக்காண்டத்திலே பேசுகிறார் இளங் கோவடிகள்.

இப்படி, கங்கையை அடிப்படுத்திய அந்தக் கோலலன் -காவிரிக்குச் சொந்தக்காரனாக இருக்கின்ற கோவலன்இவனை அந்தக் காவிரி கோபித்துக் கொள்ளவில்லையே என்று சொன்னால் அதற்கு என்ன காரணம் என்றால், வழிவழியாக இந்த நாட்டிலே இருந்து வருகிற கற்புதான் காரணமாகும். ஆகவே, கண்ணகியை அவன் நெஞ்சம் நினைந்துவிட்டது என்று நுட்பமான மனத்தை உடையகலைமனத்தை உடைய மாதவி குறைகாண்கிறான். அதனாலேதான் அவள் எதிர்ப்பாட்டுப் பாடுகிறாள்.

அந்த வகையிலேதான் இங்கே ஒரு கற்புடைய மனைவியின் கடமை?

“ஆண்கடன் அகறல் அதுநோன் றொழுகுதல்

மாண்பொடு புணர்ந்த மாசறு திருதுதல் கற்புடை மகளிர் கடனெனக் காட்டி’

என்று பெருங்கதை பேசுகிறது.

ஒரு குலமகள், தன் கணவன் எவ்வளவுதான்கொடுமைப் படுத்தினாலும் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்பது ஒரு மரபு.