பக்கம்:மு. வ. வின் சிந்தனை வளம்.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44, டாக்டர். மு.வ.வின் சிந்தனை வளம்

அந்த வகையிலே இல்லாமல் இங்கே எதிர்ப்பாட்டு பாடுகிறாள் மாதவி. இப்பண்பு கண்ணகியிடத்திலே காண முடியாதது. இவளும் ஒருவனிடத்திலே க ச த ல் கொண்டவள் போல எதிர்ப்பாட்டுப் பாடுகிறாள்.

“தம்முடைய தண்ணளியும் தாமும்தம் மான்தேரும்

எம்மை கினையாது விட்டாரோ விட்டகல்க அம்மென் இணர அடும்புகாள் அன்னங்காள் நம்மை மறந் தாரை நாம் மறக்க மாட்டேமால்’

இது கலையில் இருக்கிற ஒரு நிலை. ஏன் என்று கேட்டால் கலையில் மேம்பாடுடையவர்கள் கலையிலே தோற்கக்கூடாது என்று நினைப்பார்கள் இன்றைக்கும் அது உண்டு. அதை நீங்கள் திரைப்படத்திலே கூடப் பார்க்கலாம் வஞ்சிக்கோட்டை வாலிபன் என்ற திரைப் படத்திலே இரண்டு பேருக்கும் இடையே யார் வெற்றி பெற்றார்கள் என்பதற்குப் பதிலாக, இறுதியில் மின்சாரத்தை நிறுத்திவிடுவதாகக் கதையை முடித் துள்ளனர்.

இதற்குக் காரணம் வாழ்க்கையில் தோற்றுப்போவதை ஏற்றுக் கொண்டாலும் கை தயிலே கூட, கலைஞர்கள் தம் கலையில் தாம் தோற்றுப்போவதை விரும்பமாட்டார்கள். அப்படிப்பட்ட ஒருநிலையில்தான் “கள்ளோ? காவியமோ? நாவனில் நாம் பார்க்கிே றாம்.

இக் காவியத்திலே அக் கதை நாயகன் ஒரு வேலைக் காரியை விரும்பி மணக்கிறான். ஆனால் அவன் உள்ளத் தின் ஆழத்திலே அவனுக்கு தவறான எண்ணம் இருக்கின்ற காரணத்தினாலே என்ன இருந்தாலும் இவள் வேலைக்

காரிதானே, அந்தப் புத்திதானே இருக்கும், என்று