பக்கம்:மு. வ. வின் சிந்தனை வளம்.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர். சி.பா 45

சொல்லிவிடுகிறான். அதனால் அவர்கள் குடும்பத்திலே ஒரு பிளவு ஏற்பட்டுவிடுகிறது. இது எதனாலே? அந்தப் பெண்ணினுடைய உள்ள உணர்வுகளை, உடல் இயல்பு களை அவன் அறிந்துகொள்ளாமல் போனதனால் தன்னு டைய தோழன் வருகிறபொழுது அவள் வந்து கதவைத் திறக்கவில்லை; சரியாக உபசரிக்கவில்லை என்று சொல் கிறான். ஆனால், அவளுக்கு மாதவிலக்கு என்ற காரணத்தி னாலே அவள் உடல் சோர்வு, மற்றும் வயிற்று நோய் காரணமாக அவள் தன்னுடைய கடமைகளைச் சரியாகச் செய்யமுடியவிவ்லை என்பது பின்னாலே அவனுக்குத் தெரியவருகிறது. இதை அவன் புரிந்துகொள்ளத் தவறி விட்டான். ஒரு கணவன் என்றால் இவற்றைப் புரிந்து கொண்டிருக்கவேண்டும். அவளுடைய உடற் கூறுகளை, உள்ள இயல்புகளை, உள்ள உணர்வுகளைத் தெரிந்து கொண்டிருக்கவேண்டும். இயல்பாக எல்லோருடைய வீட்டிலும் நடக்கக்கூடிய நிகழ்ச்சிதான். ஆனால் அந்த ஒரு சிறுநிகழ்ச்சி. அன்பால் இணைந்திருக்கக் கூடியவர் களுடைய வாழ்க்கையைப் பிரித்துவிட்டது. அவ்வாறு அவர்கள் பிரிந்துவிடுவதற்குக் காரணமாக இந்த நிகழ்ச்சி அமைந்துவிட்டது என்பதை வைத்துக்கொண்டு கள்ளோ” காவியமோ என்ற நாவலை அமைத்துள்ளார்.

ஆகவே, அந்தக் கள்ளோ காவியமோ'வைப் படித்துப் பார்க்கிறபொழுது, அன்பால் இணைந்த இரண்டு உள்ளங் கள் பிரிந்து போய்விடுகின்றதனையும் அந்தமங்கைப் பாத்திரம் அவலப் பாத்திரமாகப் பின்னர்ப் போய்விடு கின்றதையும் நாம் பார்க்கின்றோம். அவளுக்குப் பிறக்கிற அந்தக் குழந்தை அவளை விரும்பவில்லை, அக்குழந்தைதன்னுடைய தந்தையினிடத்திலே வளர்கின்ற தேன் மொழி- சின்னஞ்சிறு குழந்தை. அச் சின்னஞ்சிறு