பக்கம்:மு. வ. வின் சிந்தனை வளம்.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43 டாக்டர். மு.வ.வின் சிந்தனை வளம்

குழந்தைகூட, தன் தாயை வெறுக்கிறது. ஏனென்றால் தாயினிடத்திலே அக் குழந்தை வளரவில்லை. தன் தாயை அது மதிக்கவில்லை என்கிற பொழுது அந்த நாவலின் முத்தாய்ப்பை பின்வருமாறு வைக்கிறார் மு. வ. - -

தேன்மொழி தன் தாயின் கன்னத்தைத் தொட் டாள்; தடவினாள். ‘அம்மா’’ என்றாள். மூடி யிருந்த கண்கள் திறந்தன; நன்றாகப் பார்த்தன; என்னையும் பார்த்தன. முகம் மலர்ச்சி பெற்றது.

“அந்தக் குடும்பவிளக்கு அணைவதற்கு முன்னே ஒருமுறை அழகாக ஒளி வீசியது”

-கள்ளோ? காவியமோ? ப, 267

இந்தச் சொற்களையெல்லாம் நாம் பார்க்கவேண்டும். இப்படி, சொற்செட்டாக, ஒவ்வொரு சொல்லிலும் அந்த அவலத்தைக் கோத்துக் கோத்து எழுதுகிறவர் டாக்டர் மு.வ. அவர்கள்.

புதினத்தைப் பொறுத்தவரையில், பத்திரிகைகளில் தொடர்கதையாக வெளிவந்தபிறகே, அதனை நூலாக அச்சிடப் பதிப்பாளர்கள் முன்வருவார்கள். ஆனால், டாக்டர் மு.வ. அவர்களின் நூல்கள் பதின்மூன்று நூல் களில் பதினொரு புதினங்கள் நேரடியாக நூல்களாக வெளி வந்திருக்கின்றன. மற்ற இரண்டும்கூட நட்பின் காரண மாகதங்களது பத்திரிகையின் விற்பனைக்காக அவைகளைத் தொடர்கதையாக வெளியிடவேண்டுமென்று கேட்டுக் கொண்டதற்காகத்தான் அப் பத்திரிக்கையில் வெளி யிட்டார்கள் என்பது இங்குக் குறிப்பிடத்தக்கதொன்றா கும். இந்த இரண்டு நாவல்களைத் தவிர மற்ற நாவல்கள்