பக்கம்:மு. வ. வின் சிந்தனை வளம்.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர். சி.பா. 47%

முழு நாவல்களாக வெளிவந்திருக்கின்றன. இது தமிழ் நாட்டிலே எந்த ஒர் ஆசிரியருக்கும் அக்காலத்தில் கிடைக் காததொரு பெருமையாகும்.

டாக்டர் மு.வ. அவர்கள் ஆழ்ந்த அன்புள்ெ கொண்டவர். ஒருவருடைய துன்பத்திலே பங்குகொள்ள வேண்டும் என்கிற மனம் உடையவர். அவரது நாவலில் உரையாடல்தான் அதிகம் என்று சில திறனாய்வாளர்கள் கூறுவார்கள். ஆனால், அந்த உரையாடல் மூலமாக ஒருவனுடைய உள்ளத்தைத் துாய்மைப்-படுத்தலாம் என்று எண்ணுகிறவர் டாக்டர் மு.வ அவர்கள். இதுதான் அவர்களுடைய நாவலுக்கும் மற்றவர்களுடைய நாவலுக் கும் இடையேயுள்ள வேறுபாடு ஆகும்.

ஒரு தமிழன் என்று சொன்னால், மூன்று நூல்களை வாங்கவேண்டுமென்று குறிப்பிடலாம். அவை என்ன நூல் கள் என்று பார்த்தால் ஒன்று டாக்டர் மு.வ. அவர்களின் “தங்கைக்கு"; இரண்டாவது பாவேந்தர் பாரதிதாச னுடைய குடும்ப விளக்கு"; மூன்றாவது நூல் திரு.வி.க. அவர்களின் “பெண்ணின் பெருமை அல்லது வாழ்க்கைத் துணைநலம்” என்பனவாகும்.

தாய்மார்கள் தங்கள் பெண்களைப் புகுந்த வீட்டிற்கு அனும்பும்போது சீர் வரிசையோடு திருவாசகத்தையோ, தேவாரத்வையோ அல்லது திருக்குறளையோ கொடுத்து அனுப்பவேண்டும். ஆனால் இன்றைக்கு எத்தனை தாய்மார்கள் அதைச் செய்கிறார்கள். இதை எவரும் செய்வதில்லை.

டாக்டர் மு.வ. அவர்கள் நல்ல நூல்களை அடிக்கடி படிக்கவேண்டு மென்று சொல்லுகிற பெக்ழுது, ஒரு மனிதன் வெயிலில் அலைந்துவிட்டு வருகிறவன் எப்படி