பக்கம்:மு. வ. வின் சிந்தனை வளம்.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை

இருபதாம் நூற்றாண்டு இலக்கிய வளர்ச்சிக்கு என் பேராசிரியப் பெருந்தகை டாக்டர் மு. வரதராசனார் ஆற்றிய தொண்டுகள் பல. இலக்கியம், புதினம், நாடகம், பிறர் வரலாறு, கடித இலக்கியம், இலக்கிய ஆராய்ச்சி, இலக்கியத் திறனாய்வு, இலக்கிய வரலாறு, மொழியியல் முதலான பல்வேறு துறைகளில் அவருடைய எழுதுகோல் சாதனை புரிந்தது. சென்னையில் நடந்த ஒரு தமிழ் விழாவில் அந்நாளைய இலங்கை அமைச்சர் திரு. சு. நடேசப்பிள்ளை அவர்கள் தமிழ் நாட்டின் நோபல் பரிசாளர் மு. வரதராச னார் என்று குறிப்பிட்டதனை நினைவுகூரவேண்டும். எழுத்தராய்த்தம் பணியைத் தொடங்கிய பேராசிரியர் மு.வ. அவர்கள் பல்கலைக்கழகத் துணைவேந்தராய் உயர்ந்தார்கள். அவருடைய எழுத்துகளில் தனி மனித வாழ்க்கையை சமுதாயத்தை- சீர்திருத்தும் கருத்துகள் பொதிந்து கிடக் கின்றன.

டாக்டர் மு. வரதராசனார் நினைவு அறக்கட்டளை அவருடைய மாணவர்களால் சென்னைப் பல்கலைக்கழகத் தில் நிறுவப்பட்டது. அதை நிறுவியவன் என்ற முறையில் ஆண்டுதோறும் நடைபெறும் அறக்கட்டளைச் சொற் பொழிவுகளுக்குத் தலைமைதாங்கும் பேறு கிடைத்து வந்தது. இடையில் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்த ராய்ச் சென்றபொழுது, அவ் அறக்கட்டளைச் சொற்பொழிவு களை நிகழ்த்தச் சென்னைப் பல்கலைக்கழகம் என்னை அழைத்தது. அச்சொற்பொழிவுகளை இப்பொழுது நூல் வடிவில் உங்கள் முன் படைக்கின்றேன்.

டாக்டர் மு.வ. அவர்களைப் பற்றி எந்த நூல் எழுதி னாலும் அவருடைய கருத்துகளை அப்படியே பெய்யாமல் எழுத இயலாது. அத்தகைய சிறந்த சிந்தனையாளர் அவர்; சமுதாய மருத்துவர் அவர். எனவே என்னை அறியாமல் அவர் எழுத்தின் தாக்கம் இந்நூலில் மிகுதியாக இருக்கலாம். எனவே நூவின் தலைப்பு டாக்டர் மு.வ. வின் சிந்தனை வளம்’ என்று அமைகிறது.

சென்னை-600 0.29 சி.பா. ** -- است அய்செகித்தி அமைச்

o