பக்கம்:மு. வ. வின் சிந்தனை வளம்.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

o

-o

48 டாக்டர். மு.வ,வின் சிந்தனை வளம்

அந்தப் புழுக்கம் தீரக் குளிக்கவேண்டுமென்று சொல் கிறானோ, எப்படித் தெப்பமாக வியர்வையில் நனைந்த நாம் தண்ணிரிலே குளிக்கவேண்டுமென நினைக்கிறோமோ அதுபோல சான்றோர்களின் நூல்களில் குளிக்கவேண்டும், அடிக்கடி அந்தக் கருத்துகளிலே குளிக்கவேண்டும் என்று சொல்வார்கள்.

ஒரு மேல் நாட்டு அறிஞர், நூலினை, My never failing friends are they With Whom I Converse day by day grgirl irrri.

“என்னைவிட்டு நீங்காத நண்பர்கள் அவர்கள். நாள்தோறும் அவர்களோடு நான் உறவாடுகிறேன்’ என்று சொல்கின்றார்.

பிட்ஜிரால்டு என்ற எழுத்தாளர் ஒருவர் சொல்வார்.

Herewith a loaf of broorl benath the bough; A flask of wine and a book of Verse and thou;

Singing me in the wrilder-ness And theWilderness is Paradise enow. வெய்யிற் கேற்ற கிழலுண்டு

வீசும்தென்றல் காற்றுண்டு கையில் கம்பன் கவியுண்டு

கலசம்கிறைய மதுவுண்டு’ என்று உமார்கயாம் கூறுவதாகக் கவிமணி பாடுவர்.

நாமும் அதுபோன்ற எண்ணத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

இசுலாமியப் பெருமக்கள் வீட்டில் உள்ள குரானைப் போலவோ, கிறித்துவம் பெருமக்கள் வீட்டில் உள்ள பைபிளை'ப் போலவோ இந்துக்கள் வீட்டில் ஒரு சமய நூல் இருப்பதில்லை.