பக்கம்:மு. வ. வின் சிந்தனை வளம்.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர். சி.பா. - = 49

இலக்கிய உலகில் சிறிய பரிசிலிருந்து மிகப்பெரிய “ஞானபீட விருத வரை வாங்கியவர் அகிலன். அவர்கள் ஓரிடத்திலே டாக்டர் (மு.வ. அவர்களைப் பற்றிச் சொல் லும்போது “எங்களுக்கெல்லாம் வாராத துணிச்சல் டாக்டர் மு.வ. அவர்களுக்கு உண்டு” என்றுசொல்வார்கள். ஏனென்றால் டாக்டர் மு.வ. அவர்கள்தம் நூலொன்றிற்குக் கயமை’ என்று பெயர் வைத்துள்ளார். அதில் உள்ள ஒரு பாத்திரத்தின் பெயர் “ஆணவர் என்று வைத்துள்ளார். அவர் வாழ்க்கையில் எல்லாவகை மக்களையும் கண்டவர். அதனாலே அவர்கள்,

“அந்தி வானத்தின் அழகும் உண்டு; வைகறை

வானத்தின்

சிறப்பும் உண்டு’

என்று சொல்வார்கள். ஆக மனம் மட்டும் இருந்தால் எல்லாம் முடியும் என்று சொல்வார்கள்.

அவர்களுடைய நாவல்களைப் படிக்கிறபொழுது, அந்தப் புதின வளத்தைப் பார்க்கிறபொழுது அவை வாழ்க் கையை உயர்த்துவது என்பதில் எவருக்கும் எந்தவிதக் கருத்துவேறுபாடும் இருக்கமுடியாது. அவருடைய நாவலைப் படித்து முடித்ததும் வாழ்க்கையில் ஒரு தெளிவு ஏற்படும் அவருடைய “கள்ளோ காவியமோ” என்ற நாவலை நல்ல கணவன் மனைவியர் படித்தால் அவர்கள் தம் வாழ்க்கையில் சண்டையிட்டுக் கொள்ளமாட்டார்கள்.

அதேபோல “அகல் விளக்கு” புதினத்தை இளைஞர்கள் படித்தால் வாழ்வில் சிறக்கலாம். ஆக, டாக்டர் மு.வ. அவர்களுடைய ஒவ்வொரு நாவலையும் படித்தால், அந்த நாவலைப் படித்துமுடித்தவர்கள் வாழ்க்கையில் அமைதி