பக்கம்:மு. வ. வின் சிந்தனை வளம்.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 டாக்டர். மு.வ.வின் சிந்தனை வளம்

யாக வாழமுடியும். இதற்குச் சான்றாக அவர்களுக்கு வந்த பல பாராட்டுக் கடிதங்களைச் சொல்லலாம்.

டாக்டர் மு.வ. அவர்கள், பெண்களுக்கு அறவுரை சொல்லும்பொழுது, தாரகமந்திரமாக ஒன்றைச் சொல் வார்கள்.

‘உரிமைக்காகப் போராடிக் காலம் கழிக்காதே; அன்புக்காக விட்டுக்கொத்து இணங்கி நட’’

என்று சொல்வார்கள். ஒருவர் பொறை இருவர் நட்பு” என்று சொன்ன நாலடியார் வாக்கு ஏதோ இல்லற வாழ்க் கைக்கு என்று கருதாதீர்கள். அது ஒரு காதல் வாழ்க்கைக் கும்தான். என்று கொள்ளுங்கள்” என்பார்கள் இப்படி இலக்கியத்தை வாழ்க்கையுடன் அந்த அனுபவத்திற்குக் கொண்டு போகுப்போது ஒரு புதினத்தாலே ஒரு புதிய சமுதாயத்தைப் படைக்கவேண்டும் என்று விரும்பி யுள்ளார் பெருந்தகை டாக்டர் மு.வ. அவர்கள் என்பது நன்கு விளக்கமுறும்.

இந்த நூற்றாண்டில் தமிழ்ப் பேராசிரியராகப் புகழ் படப் பணியாற்றிக் கொண்டே புதின ஆசிரியராகவும் புகழ் பூத்து விளங்கியவர் மு.வ. எனலாம். இத்தனைக்கும் அவர் எழுதிய நாவல்களின் எண்ணிக்கை, அவர் எழுதிய மொத்த நூல்களின் எண்ணிக்கையில் ஏழில் ஒரு பங்கே என்பதை நினைத்துப் பார்க்கவேண்டும். அவர்தம் முதலாவது புதினம், செந்தாமரை”யினை 1946 ஆம் ஆண்டில் எழுதினார். அடுத்த புதினம் ‘கள்ளோ? காவிய மோ? அடுத்த ஆண்டு 1947இல் வெளிவந்தது. மூன்றாவது புதினம் பாவை’ அதற்கும் அடுத்த ஆண்டில்-1948 இல் வெளியானது. அந்த நாள்’, ‘மலர்விதி’, ‘பெற்ற மனம், அல்லி’, கரித்துண்டு ஆகியன 1949, 1950, 1951, 1952