பக்கம்:மு. வ. வின் சிந்தனை வளம்.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர். சி.பா. 51

1953 முதலான ஆண்டுகளில் ஒன்றன்பின் நன்றாக வெளி வந்தன. மூன்றாண்டு இடைவெளிக்குப் பின்னர் 1956 ஆம் ஆண்டில் ‘கயமை’, நெஞ்சில் ஒரு முள் ஆகிய இரு புதினங்களுமே வெளிவந்தன. சாகித்திய அக்காதொமி பரிசு பெற்ற ‘அகல் விளக்கு 1958 ஆம் ஆண்டிலும், மண் குடிசை’ அதற்கு அடுத்த ஆண்டாம் 1959 இலும், இறுதி நாவல் வாடாமலர் 1960 ஆம் ஆண்டிலும் வெளிவந்தன.உ எனவே பேராசிரியர் டாக்டர் மு.வ. அவர்கள் எழுதிய ஏறத்தாழ எண்பத்தைந்து நூல்களில் 13 நூல்களே புதினங்களாகும். பதினைந்த ஆண்டுக்கால இடை வெளி யில் (1946-1960) இப் புதினங்கள் எழுதப்பெற்று வெளி வந்துள்ளன.

“.ெ ச ந் த ா ம ைர யி ல் .ெ த ா ட ங் கி ய அவரது படைப்பு வாழ்க்கை, காலப்போக்கில், பற்பல மாறுதலும் வளர்ச்சியும் உற்று, வாடாமலரைப் படைக்கும் போது முழுமையும் முதிர்ச்சியும் பெறு வதைக் காண்கிறோம். படைப்பு வாழ்க்கையில் அனுபவம் ஏற்பட ஏற்பட விரிவான தம் வாழ்க்கை அனுபவங்களைக் கலைப் படைப்புக்களாக வடிக்கும் பயிற்சி மிக மிக, டாக்டர் மு.வ. பலவகையான கருப் பொருள்களைக் கையாளுவதிலும் (Thanks), வாழ்க்கையின் பல பகுதிகளுக்கு உரிய பலவகையான மாந்தர்களைப் படைப்பதிலும் வெற்றிகாண்கிறார்.”, மேற்கானும் கருத்தினை டாக்டர் இரா. மொகன் டாக்டர் மு.வ. வின் நாவல்கள் (பக்கம் : 2) என்னும் தம் நூலில் குறிப்பிட்டுள்ளார்.

டாக்டர் மு.வ. அவர்களை டாக்டர் தனி நாயகம்

அடிகளார் சென்னை நாவலாசிரியர் (The Nvalest of the City of Madras) எனக் குறிப்பிட்டுள்ளார். காரணம்