பக்கம்:மு. வ. வின் சிந்தனை வளம்.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 டாக்டர். மு.வ.வின் சிந்வனை வளம்

சார்லஸ் டிக்கன்ஸ் என்னும் ஆங்கில நாவலாசிரியர் தம்

நாவல்களின் தளமாக இ ல ண் ட ன் மாநகரத்தை எடுத்துக்கொள்வது போல டாக்டர் மு.வ. அவர்களின் நாவல்கள் பலவற்றின் நிகழ்ச்சிகள் நிகழுமிடங்கள்

சென்னை மாநகரையும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளை யும் கொண்டனவாக உள்ளன. எடுத்துக்காட்டாக. ‘கரித் துண்டு என்னும் நாவலின் தொடக்கம் பின்வருமாறு அமைந்துள்ளத்தைக் காணலாம்.

“சென்னையில் பச்சைப்பன் கட்டடத்திலிருந்து பாரிமுனை வரையில் ஒருவர் நடந்து போனார் என்றால் அவருக்கு வாழ்க்கையில் பெரும் பகுதி விளங்கி விட்டது என்று சொல்லலாம். ஆனால் அவருடைய கண்ணும் செவியும் போதிய் அளவுக்குப் பண்பட்டிருக்க வேண்டும். காணும் காட்சிகளிலும் கேட்கும் ஒலிகளிலும் வாழ்க்கையின் உண்மைகளை உய்த்துணரும் பயிற்சி அவருக்கு இருக்க வேண்டும் இருந்தால் பயன்பெற முடியும், பச்சைப்பனுக்கும் பாரிமுனைக்கும் இடையில் பரந்த உலகமே இருப்ப தாகக் கூறலாம்.

(பக்கம் .9)

டாக்டர் மு.வ. அவர்கள் வாழ்க்கையைக் கூர்ந்து நோக்கியவர்; சமுதாயச் சிக்கல்களை நன்கு தெரிந்தவர். பெண்கள் படும் துயரத்தையும், சில சமயங்களில் பெண் களால் ஆண்கள் படும் துயரங்களையும் தம் புதினங்களில் பாடுபொருளாக அமைத்துப் புதினங்களைப் படைத் துள்ளார். மேலும் இளைஞர் உலகின் சிக்கல்களையும் தம் புதினங்களில் எடுத்துக் காட்டியுள்ளார். சுருங்கச் சொன்னால் தாம் கூர்ந்து பார்த்த சமுதாயத்தின் பல்