பக்கம்:மு. வ. வின் சிந்தனை வளம்.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக் L- Η •o சி.பா. - o - - 5.3.

வேறு காட்சி நிலைகளையும் தம் புதினங்களில் எடுத்துக் காட்டியுள்ளார் எனலாம்.

ஒரு புதினப் படைப்பாசிரியர் புதினத்தின் கரு (Plot) வினை யடுத்து முதலிடம் தருவது பாத்திரப் படைப்பிற்கேயாகும். அருமையான பாத்திரப்படைப்பு களால் புதினப் படைப்பாளர் பெயர் பெறுகிறார். கல்கி யின் பாத்திரப் படைப்புகளில் பொன்னியின் செல்வன் நந்தினியும். அரு இராமநாதனின் வீர பாண்டியன் மனைவி'யின் ஜனநாதனும், அகிலனின் வேங்கையின் மைந்தனின் ரோகிணியும், தி.ஜானகிராமனின் மோகமுள்’ யமுனாவும், கொத்தமங்கலம் சுப்பு (கலைமணி)யின் தில்லானா மோகனாம்பாளில் வைத்தியும், நா. பார்த்த சாரதியின் குறிஞ்சிமலர்’ அரவிந்தன், பூரணியும், தமிழ் வாணனின் ஹலோ சங்கர்லாலின் சங்கர்லாலும், விந்தனின் பாலும் பாவை’ அகல்யாவும், நம் நெஞ்சை விட்டு என்றும் அகலாத கதைப் பாத்திரங்கள் எனலாம்.

டாக்டர் மு.வ. அவர்கள் படைத்துள்ள பாத்திரங்கள் பல அவற்றுள் மறக்க முடியாத பாத்திரங்கள் கள்ளோ? காவியமோ? மங்கை; மலர்விழி செல்வநாயகம், கரித் துண்டு மோகன், அகல் விளக்கு சந்திரன், கயமை’ ஆணவர், நெஞ்சில் ஒரு முள் வடிவு. வாடா மலர்’ தானப்பன் முதலியோர் ஆவர்.ஆசிரியர் அறவாழி, தமிழா சிரியர் முருகய்யா, சான்றோர் மெய்கண்டார் முதலியோர் சிற்சிலவிடங்களில் குறிப்பிடப்பட்டாலும் அவர்கள் பேச்சால், தூது விளைவிக்கும் பயனால் நம் நெஞ்சில் நிற்கிறார்கள். -

டாக்டர் மு.வ, அவர்கள் தாம் பாத்திரங்களுக்குப் பெயரிடும் முறை குறித்த ஓர் ஆழமான செய்தியினை

翻,一4 --