பக்கம்:மு. வ. வின் சிந்தனை வளம்.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 டாக்டர். மு.வ.வின் இ ந்தனை வளம்

டாக்டர் இரா.மோகன் அவர்கள் பின்வருமாறு குறிப் பிட்டுள்ளார் : -

டாக்டர் மு.வ.வின் பெயரிடு முறையில் ஒரு புதுமையும் ஒழுங்கும் காணப்படுகின்றன. மு.வ. கொள்கையும் குறிக்கோளும் கொண்டு உயர்ந்த வாழ்க்கை வாழும் நல்லவர்களுக்குத் துய தமிழ்ப் பெயர்களை இடுவார். அறவாழி, மெய்கண்டார், கமலக் கண்ணர், அருளப்பன், சீராளர், திலகம், பாவை, செந்தாமரை, மங்கை, மலர்விழி, மென் மொழி, மான்விழி, தேமொழி ஆகிய பெயர்கள் அத்தகையன. குறிக்கோளும் பண்பாடும் இல்லாமல் மனம் போன போக்கில் வாழ்க்கை நடத்தும் தீயவர் களுக்குப் பெயர்களையும் அவ்வாறே வைப்பார். ஆணவர். அகோர், சுப்பு ரத்தினம், கேசவ ராயன், வசிகரம், சகசாம்பாள் போன்ற பெயர்கள் அவ்வகை யின. உயர்ந்த வாழ்க்கை வாழாமல், சாதாரணமான வாழ்க்கை நடத்துவோர்க்குச் சாதாரணப் பெயர்களை இடுவார். திருவேங்கடம், வேலய்யன், குழந்தைவேல், மணி, சந்திரா, வள்ளி, ரேவதி, கனகா ஆகிய பெயர்கள் அவ் வகைக்குக் காட்டுகள் ஆகும். நாம் கேள்வியே பட்டிராத புதுமையான பெயர்களையும் மு.வ.வைப்பதுண்டு, மாலன், மாசன், குய்யான், இமாவதி, இந்திரா ஆகிய பெயர்கள் அவ் வகைக்குச் சான்றாய் அமையும் பெயர்கள் ஆகும்.”

ட(டாக்டர் மு.வ.வின் நாவல்கள்; பக்கங்கள் 70, 71)

டாக்டர் மு.வ. அவர்களின் தலையாய வேட்கை நல்ல குடும்பம் அமைய வேண்டும் என்பதுதான். கணவனும் மனைவியும் ஒத்து அன்பான இல்லறம் நடத்த வேண்டும் என்பதில் அவர் கொண்டிருந்த ஆர்வம் பின் வரும் பகுதி