பக்கம்:மு. வ. வின் சிந்தனை வளம்.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- . ங் .هس - - - so டாக்டர். சி.பா. - - - 55

யால் விளக்கமுறும் :

“எனக்கு ஆனும் பெண்ணுமாகக் குடும்பங்கள் அன்பாக வாழவேண்டும் என்பதில் ஆசை உண்டு. ஏன் என்றால், கணவனும் மனைவியுமாக அன்பாக வாழும் வாழ்க்கை இல்லை என்றால், காட்டில் உள்ளதைவிட நாட்டில் கொடுமையான விலங்குத் தன்மை இருக்கும். இந்த நாகரிகம் எதுவும் ஏற்பட் டிருக்காது. காட்டை விட மிகுதியான உறுமல் நாட்டில் இருக்கும், அல்லது, உலகத்தில் பாதிப்பேர் பைத்தியக்காரராக இருப்பார்கள். ஆகையால் எப்போதுமே நான் காதல் வாழ்க்கையை ஆதரித்து வருகின்றேன். தோட்டத்தில் ஒரு நல்ல முல்லைக் கொடி செழித்து வளர்ந்து பூத்தால் எப்படி மகிழ்ச்சி அடைவேனோ, அப்படி எந்தக் குடும்பத்திலாவது அன்பாக வாழ்க்கை நடந்துவதைப் பார்த்தால் மகிழ்ச்சி அடைவேன்’ (நெஞ்சில் ஒரு முள், ப : 389)

இவ்வாறு அன்பான வாழ்க்கை வாழ்ந்த புதினப் பாத்திரங்கள் இருவரின் வாழ்க்கையினை அந்தநாள் என்றும் புதினத்தில் ஆறுமுகம்” என்னும் பாத்திரத்தின் வாயிலாகப் புலப்படுத்தியுள்ளார்.

“பொன்முடி! எப்படியோ வாழ்ந்தோம். உலகத்தை வாசற்படிக்கு வெளியே விட்டு விட்டு வாழ்ந்தோம். உலகப்பற்றை விட்ட இடம்தானே வீடு? நாம் வாழ்ந்த வாழ்வு வீட்டு வாழ்வுதான்! பிறருடைய புகழையும் மதிப்பையும் பொருட் படுத் தாமல் வாழ்ந்தோம். உலகத்தை உள்ளே விட்டிருந் தால் வாழ்க்கை ஒரு பெருஞ்சுமையாகி விட்டிருக்கும். நமக்கோ வாழ்க்கை ஒரு நல்ல விளையாட்டாகவே