பக்கம்:மு. வ. வின் சிந்தனை வளம்.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர். மு.வ.வின் சி ந்தனை வளம்

முடிந்தது. இன்பம் துன்பம் இரண்டிலும் விளையாடி னோம். வாடகை வீட்டில் குறைந்த வருவாயில், நிறைந்த வாழ்க்கை வாழ்ந்தோம். பணம் நிறைந்த வாழ்க்கை இல்லையானாலும் மனம் நிறைந்த வாழ்க்கை வாழ்ந்தோம். போதும்’

(அந்த நாள் ப : 101)

இல்லறத்தில் ஈடுபடும் ஆண் பெண் ஆகிய இருவரும் என்னென்ன தகுதிகளைக் கண்டு தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது குறித்தும் மு.வ. அவர்கள் தம் கருத்துகளைப் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.

“ஒருநாள் இரண்டு நாள் கண்ணராக்கண்டு மகிழ்த்து குலாவுகிற உறவுக்கு-விபசார நட்புக்குஅழகு கட்டாயம் வேண்டும்-ஆனால் வாழ்நாள் முழுவதும் பழகும் வாழ்க்கைத்துணைக்கு அன்புதான் முதலில் வேண்டியது. அழகு இருந்தால் இருக்கட்டும்”

(களளோ? காவியமோ? -ப ; 134.)

இவ்வாறு அன்பால் இணைந்த கணவனும் மனைவியும் இல்லற வாழ்க்கையில் வெற்றிபெற வேண்டுமானால் அன்றாட வாழ்க்கையில் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழவேண்டும் என்கிறார். மேலும் ஒருவரை ஒருவர் நம்பிக் காதல் வாழ்க்கையில் ஒருவகைக் கண் முடி வாழ்க்கையினை-கள்ளங்கரவற்ற ஒரு குழந்தை போன்ற மனப்பான்மையுடன் வாழவேண்டும் என்கிறார். குணம் நாடிக் குற்றமும் நாடுகின்ற மனம்பான்மை இல்லற வாழ்க்கையில் ஈடுபடும் கணவனும் மனைவியும் கொள்ள வேண்டும் என்கிறார். வாழ்க்கையின் தொடக்கநாட்களில் உரிமைக்காகச் சிறிது போராடலாம். பிறகு கணவனுக்கு இணங்கி மனைவி நடக்கவேண்டும். அவ்வாறு நடந்தால்