பக்கம்:மு. வ. வின் சிந்தனை வளம்.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர். சி.பா. - 57

தான்.தவறுகின்ற கணவனைத் திருத்த ஒரு வாய்ப்புஏற்படும் அளவுக்குமேல் கணவனோடு போராடினாலும் அதனால் பயன் விளையாது என்கிறார், அளவுக்கு மேல் போராடு வதும் தவறு; அளவுக்குமேல் விட்டுக் கொடுப்பதும் தவறு என்று வற்புறுத்துகின்றார். அளவு தெரிந்து நடந்தால் இன்பமே, எந்நாளும் துன்பமில்லை என்கிறார். ஆடவர் சிலர் தங்கள் கற்பனையில் தங்களுக்கு மனைவி இன்னன்ன பண்புகள் கொண்டவராக வரவேண்டும் எனத் தங்களுக்குள்ளேயே ஒரு கற்பனைக் கோட்டையை எழுப்பிக் கொள்வார். மனைவியிடம் அளவுக்குமேல் அழகு அன்பு, அடக்கம், அறிவு, ஆற்றல் முதலியனவற்றை எதிர்பார்த்து ஏமாந்து துன்புறுவர். எனவே இதற்கு ஒரே வழி, விரும்பியது கிடைக்கவில்லை யென்றால், கிடைத்ததை விரும்பவேண்டும் என்கிறார்.

மேலும் டாக்டர் மு. வ. ஒரு புரட்சிகரமான கருத் தினையும் குடும்ப வாழ்வு குறித்துக் குறிப்பிடுகின்றார். அன்பால் வாழ்க்கையில் பிணைந்தவர்கள், ı%laörGorri மனவேறுபாடுற்றுப் பிரிய வேண்டிய நிலைமை நேரிட் டால் அவர்கள் எந்தச் சிக்கலுமின்றிப் பிரிந்துபோகச் சமுதாயம் அனுமதிக்க வேண்டும் என்கிறார். அவர் கருத்தினை அல்லி என்னும் புதினத்தில்,

கணவன் மனைவிக்கு இடையே தீராத வெறுப்பு ஏற்பட்ட பிறகு விட்டு விலக உரிமை வேண்டும். அறிஞர் ஷா கூறுவதுபோல், விலகு வதற்குக் காரணம் என்ன என்று கேட்க நீதிமன்றமும் முன்வரக்கூடாது. விலக உரிமை இல்லாமல் கட்டுப் படுத்துவதற்கு மணம்-திருமணம் என்ற பெயரே கூடாது” (ப; 287)

என்றும், நெஞ்சில் ஒரு முள்’ என்னும் புதினத்தில்,