பக்கம்:மு. வ. வின் சிந்தனை வளம்.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 டாக்டர். மு.வ.வின் சிந்தனை வளம்

‘குடும்பம் என்றால் ஒருவர் மனக்கவலையை மற்றவர் குறைப்பதற்காக ஏற்பட்டது. ஆனால் உள்ள கவலையை வளர்த்து மீளாத் துன்பத்தில் வருந்துவதானால், அந்தக் குடும்பத்தைக் கலைத்து விடுவதே நல்லது.”

என்றும்,

‘முடிந்தால் வாழலாம்; முடியாவிட்டால் பிரிய லாம். உலகம் பரந்த உலகம். எல்லோருக்கும் இங்கே இடம் உண்டு. அவரவர்கள் தங்களுக்குப் பொருத்தமான இடம் தேடிக் கொண்டு வாழ்வதே நல்லது’ என்றும் டாக்டர் மு. வ. அவர்கள் குறிப்பிடும் கருத்துகள் (பக்கங்கள் 480-485) புரையோடிப் போன சமுதாயப் புண்ணிற்கு அவர் இடும் அருமருந்துகள் எனலாம்.

டாக்டர் மு. வ. தாம் படைத்துள்ள பாத்திரங்கள் அனைவரும் நல்ல தமிழ் பேசுபவர்களாகவே படைத் துள்ளார். பாத்திரங்களுக் கேற்ப உரையாடல்களை அமைக்கவில்லை: அவருடைய நடை எளியது; துரயது: விழுமியது. நடை எனப்படுவது ஒர் ஆசிரியரின் தனிப் பட்ட சிந்தனை, பார்வை என்று கருதப்படுகின்றது. பேராசிரியர் டாக்டர் மா. இராமலிங்கம் அவர்கள் மு. வ.வின் நடை குறித்துப் பின்வருமாறு தம் கருத்தை வழங்கியுள்ளார் :

சின்னஞ்சிறு வாக்கியங்கள். உள்ளத்தில் இருக் கும் சிந்தனைத் தெளிவை அப்படியே பிரதிபலிக்கும் தொடரமைப்புக்கள். சிக்கலான விஷயத்தையும்