பக்கம்:மு. வ. வின் சிந்தனை வளம்.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர். சி.பா. 59

போகிற போக்கில் எளிமையாகப் புரிய வைத்துவிடும் பண்பு-இவையே மு. வ. நடையின் தனிச்சிறப்புக் கள்’ (நாவல் இலக்கியம்; ப: 166)

என்று குறிப்பிடுகின்றார்.

டேவிட் சித்தையா அவர்கள் டாக்டர் மு. வ. அவர்களின் மொழிநடை பற்றிக் குறிப்பிட்டுள்ள கருத்து கள் உள்ளபடியே மிகச் சிறந்த திறனாய்வாக அமைந் துள்ளதைக் காணலாம்: -

“மு. வ. அவர்கள் நடை எளிமையானது. தெளி வானது. இனிமையானது, தூய்மையானது. தமிழ் மயமானது. அமைதியான காட்டில் ஒடும் தனிமை யான சிற்றருவியைப் போன்றது. அதன் இனிய ஒசை எவ்வளவு நேரமானாலும் எத்தனை தடவை யானாலும்கேட்டு அனுபவிக்கலாம். தெளிவு, அமைதி: தனித்தன்மை ஆகிய மூன்றையும் அவர் நடையில் சுவைக்கலாம். நேருக்கு நேர் பார்ப்பது, நேராகவே சொல்வது, எளிய பதங்களைப் பயன்படுத்துவது, பேச்சு சந்தங்களைப் பின்பற்றியே வ ச ன ம் அமைப்பது-இவை இவருக்கு இயல்பாகவ்ே அமைந்த கை வண்ணங்கள்” (வளரும் தமிழ் இலக்கியம்: ப: 142-143)

டாக்டர் மு. வ. அவர்கள் துய இலக்கிய நடை எழுதுவது உண்டு. சிற்சில சமயங்களில் உயிரும் உணர்ச்சி யும் துலங்க நடைச்சித்திரங்களைத் தம் நடைமூலம் நம் கண்முன் கொண்டு வருவதும் உண்டு, முன்னதற்கு ‘மலர்விழி என்னும் புதினத்தில் வரும் கீழ்க்காணும் பகுதியினை எடுத்துக் காட்டாகக் கொள்ளலாம் :