பக்கம்:மு. வ. வின் சிந்தனை வளம்.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 டாக்டர். மு.வ.வின் சிந்தனை வளம்

கதிரவன் செந்நிறப் பிழம்பாய்ப் பல நிறக் கடலில் அமைதியாக மூழ்கும் காட்சியைக் கண்டேன். கதிரவனின் மறைவுக்குப் பரபரப்போடு அலங்காரங் கள் செய்து கொண்டிருந்த மேகங்களும் ஏதோ அமைதியடைந்து கண்மூடி வழிபாடு செய்வதுபோல் இருந்தன. பகலில் க ண் ட பல காட்சிகளையும் மறந்து தாயின் ஆராரோ பாட்டை மட்டும் கேட்டபடியே கண்ணை மூடி உறங்கத் தொடங்கும் குழந்தையைப் போல், வான மண்டலமே பறவை களின் பாட்டொலியைக் கேட்டபடியே கண்மூடி உறங்குவது போல் இருந்தது. காலையில் எழும் போதும் இயற்கைத் தாய் இவ்வாறு ஒலி செய்து கொஞ்சினால்தான் இந்த வானக் குழந்தை மறுபடி யும் கண் திறந்து பார்க்கும்.” (மலர்விழி : 203) உணர்ச்சி மிக்க நடைக்கு டாக்டர் மு. வ அவர்கள் “கள்ளோ? காவியமோ?’ என்னும் புதினத்தில் அமைந் திருக்கும் பின்வரும் பகுதியினை எடுத்துக் காட்டாகக் கொள்ளலாம் :

“அப்போது எ ன் னு ைட ய மோட்டாரின் ஊதொலியே கேட்டது. எழுந்து எட்டிப் பார்த்தேன். அவர் இறங்குவதைக் கண்டேன். டிரைவர் கைகாட்ட மாடிப்படிகள் ஏறிவந்தார். அவர் முகத்தில் ஒன்றும் இல்லை; ஏதோ ஒரு வகை அமைதி இருந்தது.

“எதிரில் சென்றேன்.பார்த்ததும் கைகூப்பினேன். மங்கை என்றார். என் இரண்டு கைகளையும் பிடித்துக் கொண்டு பேசாமல் நின்றார்?” (ப : 238)

டாக்டர் மு. வ. வின் புதினங்கள் சமுதாயத்தில் ஏற்படுத்திய மாற்றங்கள் பல; பெண்ணுலகம் படும் துன்பத்