பக்கம்:மு. வ. வின் சிந்தனை வளம்.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர். சி.பா. 61

தினையும், இளைஞருலகு பெறும் இன்னல்களையும். சமுதாயத்தில் கொடியவர் சிலர் நல்லவர்களை நலியச் செய்வதனையும், குடும்ப வாழ்க்கையில் ஏற்படும் சிக்கல் களையும் தம் புதினங்களைப் படிப்பவர் மனத்தில் பதியச் செய்யும் வகையில் அவர் தம் புதினங்களைப் படைத் துள்ளார். அவருடைய எழுத்துகள் சமுதாய நோக்குடை யனவாக இருந்தன.

சமுதாயம் நல்லவர்களை நலியச் செய்து இறுதியில் அவர்களைத் தீயவர்களாக்கிவிடுவதனைப் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார் :

“நாம் எல்லோரும் சேர்ந்து என்ன செய்து வருகிறோம் தெரியுமா? அறத்தை நம்பும் நல்லவர் களை முதலில் வறியவர்களாக ஆக்குகிறோம்: பிறகு இரக்கமற்றவர்களாக ஆக்குகிறோம்; பிறகு போக்கிரி களாக மாற்றுகிறோம்.” (கரித்துண்டு; ப : 54)

எத்தன்மைத்தான சமுதாயம் அமையவேண்டும் என்பதனை மு. வ. அவர்கள் “கயமை” என்னும்

புதினத்தில்,

“வயிறு வளர்ப்பது பற்றியும் குடும்பம் வாழ்வது பற்றியும் யாருக்கும் கவலை இருக்கக் கூடாது. உழைக்கக் கையும் காலும் இருந்தால் உயிர்வாழ உரிமையும் உண்டு என்ற நிலைமை நாட்டில் ஏற்பட வேண்டும். பிறந்தவர்கள் எல்லோரும் ஏதாவது தொழில் செய்து பிழைக்க முடியும் என்ற கட்டாயப் பொருளாதார நிலைமை ஏற்படவேண்டும். இப்போது கட்டாய வயிறு, கட்டாயக் குடும்பம், கட்டாயக்கல்வி, கட்டாய ராணுவம் என்று என்னென்னவோ இருக் கின்றன. ஆனால் கட்டாய உணவு, கட்டாய உடை,