பக்கம்:மு. வ. வின் சிந்தனை வளம்.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 டாக்டர். மு.வ.வின் சிந்தனை வளம்

கட்டாய வீடு, கட்டாயப் பொழுதுபோக்கு, கட்டாய உழைப்பு என்ற அமைப்புகள் வரவில்லை, அதனால் தான், எப்படியாவது வாழவேண்டுமே என்ற கவலை ஒவ்வொ ருவரையும் வாட்டுகிறது. எப்படியும் வாழ முடியும் என்ற நம்பிக்கை உள்ள சமுதாயமாக அமைக்கவேண்டும்” (ப ; 105, 106) என்று குறிப் பிட்டுள்ளார்.

மு. வ. அவர்கள் படைத்த புதினங்கள் சிலவற்றின் தொடக்கமும் முடிவும் நம் நினைவுத் திரையில் நீங்காத இடம் பெற்றுவிடுகின்றன. எடுத்துக் காட்டாக,

செந்தாமரை :

தொடக்கம் :

“பெற்ற தாயைவிடப் பெரிய துனை இல்லை என்கிறார்கள். எனக்கோ பெற்ற தாயே பெரிய பகையாய் இருக்கிறாள்.’

முடிவு :

“பணத்தின் எல்லை, சட்டம் வெல்வதும் சாட்சி

தேடுவதும்; காதலின் எல்லை, சேர்ந்து வாழ்வதும்

பிரிந்து சாவதும் தவிர வேறு உண்டோ?”

கள்ளோ? காவியமோ?

தொடக்கம் :

‘உலகம் பொல்லாதது. அவர் நல்லவராக இருந் தாலும் உலகம் பொல்லாதது”

முடிவு :

“அந்தக் குடும்ப விளக்கு அணைவதற்கு முன்னே ஒருமுறை அழகாக ஒளிவீசியது”.