பக்கம்:மு. வ. வின் சிந்தனை வளம்.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 டாக்டர். மு.வ.வின் சிந்தனை வளம்

முடிவு : -

“கட்டடத்திற்கு-இந்தப் பள்ளிக்கூடத்துக்குவாடாமலர் என்று பெயர் வைக்கப்பட்டதா?” என்றாள் மனைவி.

“ஆமாம்’ என்று சொல்லி அந்தத் தென்கிழக்கு மூலையைப் பார்த்தேன்,

“அங்கே அந்தப் பூஞ்செடிகள் செந்நிற மலர்கள் பூத்து அழகாக விளங்கின.”

இவ்வாறு டாக்டர் மு.வ. அவர்கள் எழுயுெள்ள புதினங்கள் அனைத்தும் பொழுது போக்குப் புதினங்களாக அமைந்துவிடாமல், ஓர் இலட்சிய வாழ்க்கையைச் சித்திரித்து, வாழ்க்கையின் பல்வேறு சிக்கல்களை விளக்கி, எப்படியாவது வாழலாம் என வாழ்பவர், இறுதியில் அடையும்இன்னல்களையும், இப்படித்தான் வாழ்வேண்டும் ஒத்து நெறியோடு வாழ் ப வ ர் பெறும் மன அமைதியினை விளக்குகின்றன. சுருங்கச் சொன்னால் டாக்டர் மு.வ. அவர்களின் புதினங்கள் ஒருவர் நல்ல வாழ்வு வாழ வழிவகுக்கும் குறிக்கோள் நோக்குடைய புதினங்கள் எனவாம்.