பக்கம்:மு. வ. வின் சிந்தனை வளம்.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. டாக்டர் மு.வ. வின் சிந்தனைவளம்

டாக்டர் மு.வ. அவர்கள் எதையும் எளிமையாகப் புரியவைக்கக்கடிய ஒரு நடையைக் கொண்டிருந்தார் என்பதனை எவரும் அறிவர். இந்த எளிமையான நடை தான் அவருடைய கருத்துகளுக்கு விளக்கமாக அமைந் திருந்தது. “ஆசிரியருடைய மேல்உடையாக நடையைக் கருதக்கூடாது; அவருடைய தோலே அந்த நடை’ “The Style is not the Soul of the author, but the skin of himself” என்று சொல்வார்கள். எதையும் எளிமையாகப் புரியவைக்கக்கூடிய அந்த ஆற்றல் அவரைச் சமுதாயத்திலே மிகப்பெரியவராக வளர்த்தது எதையும் எளிதில் புரியவைக்கக்கூடிய ஆற்றல் என்பது. எல்லோருக்கும் கைவந்த கலை அன்று. அந்தக் கலையிலே அவர் மிகத் திறம்படச் சிறந்து விளங்கினார். அவருடைய எழுத்துகளைவிட அவரோடு பழகியவர்களுக்கு அவர் சொல்கின்ற ஒவ்வொரு சொல்லும் மந்திரச் சொல்லாக இருக்கும்.

அவருடைய வாழ்க்கையிலே பல்வேறு வழிகளில் தொடர்புடையவர்களை நாம் பார்த்திருக்கமுடியும். அப்படி இருந்தவர்களெல்லாம், அவரோடு பேசிவிட்டு வரும்பொழுது ஒரு சிறந்த அறிவுச் சுரங்கத்தைப் பெற்று வந்தோம் என்கிற ஒர் எண்ணத்தோடு வருவதை நாம் பார்க்கலாம்.

அவருக்கு ஒரு குழந்தை மனம் இருந்தது. தமிழிலே

எத்தனையோ நூல்கள் வந்திருக்கின்றன. ஒரு பெரும் பேராசிரியர்-தமிழ்நாட்டினுடைய ஒரு தலைசிறந்த