பக்கம்:மு. வ. வின் சிந்தனை வளம்.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் மு.வ.வின் இலக்கிய வளம்

1952-ஆம் ஆண்டு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் சென்னையில் ஒரு தமிழ் மாநாடு நடைபெற்றது. அம்மாநாட்டில் சங்க இலக்கியம்’ எனும் பொருள் குறித்து டாக்டர் மு. வ. அவர்கள் சொற்பொழிவாற்றினார்கள். அவ் இலக்கிய மாநாட்டிற்குத் தலைமை தாங்கியவர் அது பொழுது இலங்கையில் அஞ்சல் துறை அமைச்சராக

இருந்த திரு.சு. நடேசப்பிள்ளை அவர்கள் ஆவர். டாக்டர்

மு. வ. அவர்களை அவையோர்க்கு அறிமுகப்படுத்தி இலங்கை அமைச்சர் பேசியபொழுது, டாக்டர் மு. வ. அவர்கள் தமிழ்நாட்டின் இலக்கிய நோபல் பரிசாளர்’

என்று குறிப்பிட்டார். அந்த அளவுக்கு டாக்டர் மு. வ.

அவர்களுடைய நூல்கள் தமிழ்நாட்டில் நாற்பதுகளிலும் ஐம்பதுகளிலும் பெரும் புகழ் பெற்று மக்களிடையே

விளங்கின; பரவின. .ெ ச ன் ைன, தேனாம்பேட்டை

காங்கிரஸ் மைதானத்தில் நடைபெற்ற அந்த இலக்கியக் கூட்டத்தில் டாக்டர் மு. வ. அவர்கள் அகநானுாற்றில்

முல்லைத் திணையில் அமைந்திருக்கும் ஒரு பாட்டில்

வரும், -

செந்தரர் பைங்கிளி முன் கை ஏந்தி இன்றுவரல் உரைமோ... எனும் பாட்டின் பகுதிக்கு விளக்கவுரையாற்றிய அந்தக் காட்சி இன்னும் என் நெஞ்சுத் திரையில் நிழலாடுகின்றது. தமிழ் நாட்டின் இலக்கிய நோபல் பரிசாளர் என்று அயலகத்து அமைச். 『 அவரைப் பாராட்டுகின்ற வகை

சி. —l