பக்கம்:மு. வ. வின் சிந்தனை வளம்.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 டாக்டர். மு.வ.வின் சி ந்தனை வளம்

நூலாசிரியர்-குழந்தை’ என்கிற பெயரிலே நூல் எழுதி யிருக்கிறார். அது நாம் பாராட்டவேண்டிய ஒன்று. ஒரு குழந்தையினிடத்திலே பேசுகிறபொழுது நம்முடைய மனம் சான்றாண்மை மிக்கதாக ஆகின்றது.

‘முல்லைச் சிரிப்பாலே என்மூர்க்கம் தவிர்த்திடுவாய்

இன்னஞ்சிறு கிளியே கண்ணம்மா”

என்பார் பாரதி.

இதனைச்சற்று ஆழ்ந்து சிந்தித்துப் பார்க்கவேண்டும். ஏன் கவிஞர் அப்படிச் சொல்கின்றார்?’ என்னுடைய கோபத்தை என்னுடைய ஆளுமையை தன்னுடைய சிரிப்பாலே அந்தக் குழந்தை தவிர்த்துவிடுகிறது என்று சொல்வார்.

குழந்தை இயற்கையாக மொழி வளர்ச்சியுடைய குழந்தை. மொழியை எப்படிக் கையாளவேண்டுமென்று தெரிந்த குழந்தை. அதற்குச் சான்று சொல்கிறார். நீங்கள் தடு என்று சொல்லுங்கள் அதிலிருந்து தடுத்தான் என்று சொல்லுங்கள். எடு-எடு த்தான், படு-படுத்தான், இவ்வாறு சொல்லிக்கொண்டேவந்து நடு-நட்டான் என்று. சொன்னால், அந்தக் குழந்தையினுடைய முகத்தில் ஒரு களிப்பைப் பார்ப்பீர்கள். குழந்தை முகத்தைச் சுளித்துச் கொள்ளும். இதுவரையிலே எடு-எடுத்தான், படு-படுத் தான் என்று சொல்லிக்கொண்டு வந்ததைக் கேட்டுக் கொண்டிருந்த அந்தக் குழத்தை நீங்கள் நடு-நட்டான் என்று சொன்னவுடன் தன் முகத்தைச் சுளித்துக் கொள்கிறது. அதற்குக் காரணம்: அங்கே நடுத்தான் என்று வரவேண்டும். சில இடங்களிலே வேறுவகையாக அமையும் அது குழந்தையினுடைய தவறு இல்லை. அம் மொழியினு டைய சிக்கல் என்று சொல்வார். --