பக்கம்:மு. வ. வின் சிந்தனை வளம்.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* ,

குழந்தைகளோடு விளையாடுவதில் நேரம் காலம் தெரியாது விளையாடிக் கொண்டிருப்பார். அவருடைய பேரன் புகழேந்தியிடத்திலே அவர் கழித்த காலம் மிகுதி. ஒரு சமயம், “உன்னுடைய மகன் சேரனைப் போலவே என்னுடைய பேரன் புகழேந்தியும் கண்ணாடி அணியத் தொடங்கி விட்டான்’ என்று எனக்குக் கடிதம் எழுதியிருக் கிறார். குழந்தையோடு குழந்தையாகக் குழந்தை மனங் கொண்டு பேசுவார்; எழுதுவார்.

அவருடைய ‘குழந்தை’ என்ற நூலை அவர் எப்படித் தொடங்குகிறார் என்பதை நாம் பார்க்கிற பொழுது, அவருடைய சிந்தனை வளத்திற்கு ஒரு தோற்றுவாயாக, தோரணவாயிலாக அமைவதைக் காணமுடிகிறது.

“ஒரு நாள் மாலை நான் நண்பரை அழைத்துக் கொண்டு அவருடைய வீட்டிலிருந்து ஆற்றங்கரைக்குப் புறப்பட்டேன். அவர் அல்லியை அழைத்துக் கொண் டார். அழகன் த ா னு ம் வருவதாகக் கெஞ்சினான். அவனுடைய தாயும் அழகனை அழைத்துச் செல்லுமாறு சொன்னாள். “அவன் வேண்டா, நடக்க மாட்டேன் என்று வழியெல்லாம் துக்கிக்கொள்ளச் சொல்கிறான். என்னால் தூக்கிக்கொண்டு நடக்கமுடிய வில்லை” என்றார். “எனக்கும் அப்படித்தானே இருக்கும்” என்று தக்க மறு மொழி தந்தாள் அந்த அம்மா. உள்ளுக்குள் மகிழ்ந்தவாறே நான் நடந்தேன். அழகன் அழுவதைத் திரும்பித் திரும்பப் பார்த்தவாறே நண்பரும் அல்லியும் வந்தார்கள். ■

பார்த்து, “அழகன் முன்போல் இல்லை. வீட்டில் ஒடிஆடி விளையாடியபடியே இருக்கிறான்; நொடிப்பொழுதும்

伊。 -5