பக்கம்:மு. வ. வின் சிந்தனை வளம்.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

飄 *

70 டாக்டர். மு.வ.வின் சிந்தனை வளம்

சும்மா இருப்பதில்லை. இப்படி எங்கேயாவது வெளியே அழைத்துக்கொண்டு வந்தால் நடக்கமாட்டேன் என்கி றான், தூக்கிக்கொண்டே போகவேண்டும் என்று பிடிவதாம் செய்கிறான். அதனால்தான் விட்டுவிட்டேன்’ என்றார்.

‘வீட்டில் மனம் வேலைசெய்கிறது. மனத்தின் வழியே கைகால் ஆடவும் ஒடவும் முடிகிறது. வெளியே வந்தால் மூளை வேலை செய்கிறது” என்றேன்.

அதனால் ஆள்மேல் சுமையாக இருக்கவேண்டுமா?” என்றார்.

‘இது தெரியாதா அய்யா! மனம் புலன்களை இயங்கச் செய்கிறது. உடல் இயங்குகிறது. வீட்டுக்கு வெளியே வரும்போது குழந்தையின் கண் எவ்வளவோ காட்சிகளைப் புதுமையாகக் காண்கின்றது. கண்ணின் வழியாக மூளை கற்கத் தொடங்குகிறது. புதிதாக ஒன்றைக் கற்கும்போது உடம்பு இயங்காது. மூச்சும் வேகமாக ஓடாது. அது இயற்கை. அதனால் நடக்காமல் தோள்மேல் இருந்த படியே கற்கும் ஆர்வம் என்று கரு தவேண்டுமே.தவிர, சுமை யாகத் தொல்லை தரவிரும்புகிறான் என்று கருதக்கூடாது. குழந்தையாக இருக்கும்போது முதல் நான்கு ஐந்து ஆண்டுகளுக்குள் மூளை வளர்கிற வேகம் மிகுதி என்றும், அதன்பிறகு வாழ்நாள் எல்லாம் வளரும் வளர்ச்சியும் அதற்கு ஈடு ஆகாது என்றும் ஆராய்ச்சியாளர்கள் சொல் இறார்கள். அதனால் குழந்தையை அடிக்கடி வெளியே அழைத்துக் கொண்டுவருவது தான் கடமை. ஆங்கி லேயர்கள் அப்படிச் செய்கிறார்கள் பார்!”

-குழந்தை , ப : 41 42,