பக்கம்:மு. வ. வின் சிந்தனை வளம்.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

. قi_ .جھی = - * * * டாக்டர். சி.பர். - 71

‘குழந்தை’ என்கிற நூலில் இந்த ஒரே ஒரு பக்கத்தி லேயே அவர் சொல்கின்ற அந்தக் காட்சிகளைப் பார்க்கிற பொழுது உளவியல் நுட்பம், அந்த மொழியினுடைய நுட்பம், அந்தக் குழந்தை புதிய காட்சிகளைக் கான வேண்டுமென்கின்ற ஒர் ஆர்வம் இவ்வளவையும் கொண்டு வந்து காட்டியுள்ள அந்த நடை மிக எளிமையாக உள்ளது. மிக எளிமையாக, போகிற போக்கிலே புரிந்துகொள்ளத் கூடிய வகையிலே அவர் நடையை எடுத்துக்காட்டு கின்றார். இதுதான் மு. வ. வின் பெருஞ்சிறப்பிற்குக் காரணம் ஆகும். அவர் உளவியல் நுட்பம் மிகமிக வாய்ந்தவராகத் திகழ்ந்தார். இதனை, வகுப்பறையிலே அவர் பாடம் சொல்லிக்கொண்டு வருகிறபொழுது மிக எளிதாகப் பார்க்கலாம்.

உரையாடல் கலையில் டாக்டர் ஜான்சனை மிகச் சிறந்த அறிஞன் என்று சொல்வார்கள். ‘The Best conversation. alist the world have ever produced” என்பதுதான் டாக்டர் ஜான்சனுடைய பெருமை. இது வரை உலகில் கண்டதில் டாக்டர் ஜான்சனைவிட உரை யாடல் திறத்தினில் சிறந்தவர் எவரும் இல்லை என்று சொல்வார்கள். டாக்டர் மு.வ. அவர்களோடு உரையாடி யிருப்பீர்களே யானால் இந்தக் கருத்தை விளங்ஒத் கொண்டிருக்கமுடியும். காரணம், அவர் ஒர் ஐந்து மணித் துளிகள் நம்மிடத்திலே பேசினார் என்று சொன்னால் அதனை நாம் எழுதிவைத்துக்கொள்ளலாம். அவ்வளவு கருத்துகள் அதிலே இருக்கும். நான் முதன்முதலில் பி.ஏ. (ஆனர்சு) வகுப்பில் சேர்ந்தவுடன் அவரிடம் அவர் விட்டில் வேப்பமரத்தினடியில் உட்கார்ந்து என்னுடைய வாழ்நாளில் முதன்முதலில் அவரோடு பேசியதை 60 பக்கத் திற்கு எழுதிவைத்திருக்கின்றேன். --