பக்கம்:மு. வ. வின் சிந்தனை வளம்.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

** 1.

73 டாக்டர். மு.வ.வின் சிந்தனை வளம்

அடிப்படையிலே நான் இளைஞர்களுக்குச் சொல்லிக் கொள்வது என்ன வென்றால் எந்த ஒரு பொருளைப் பார்த்தாலும் கூர்ந்து பாருங்கள். எந்த ஒரு காட்சியைப் பார்த்தாலும் அதை ஆழ்ந்து பாருங்கள் என்பதாகும்.

டாக்டர் மு.வ. அவர்களுக்கு, எழுதக்கூடிய ஆற்றல் எப்படி எப்படி இருந்தது என்பது அவரோடு பழகக் கூடியவர்களுக்குத் தெரியும். அவர் ஒரு நிகழ்ச்சியைச் சொன்னால் அது எப்பொழுதும் நினைவில் நிற்கும்.

டாக்டர் மு.வ. அவர்கள், தான் முதலில் பச்சையப்பன் கல்லூரியில் பணியாற்ற உதவிய மாசிலாமணி முதலியார் அவர்களை நன்றியோடு தமது நாவலில் மாசிலாமணி முதலியார் தெருவிலே என்று குறிப்பிட்டிருக்கிறார்.

கிராமச் சூழலில் வாழ்ந்தவர், அந்த வகையில் பார்க்கிறபொழுது, டாக்டர் மு.வ. சின்னஞ்சிறு வயதிலேயே எளிமையாக எழுதுவது என்பது அவருக்குக் கைவந்த கலை. அக்கலை எப்படி வளர்ந்தது? பெர்னாட்சாவை அவர் ஆழ்ந்து ஆழ்ந்து படிப்பார். அவரது கையில் எப்பொழுதும் ஆங்கில நூல் ஒன்று இருக்கும். அதிலும் பெர்னாட்ஷாவினிடத்திலே பெரிய ஈடுபாடு உடையவர்.

ஒரு மாணவர் அதுவும் அவர்களுடைய நெஞ்சம் கவர்ந்த மாணவர் என்று சொன்னால், பண்பாடு உடைய மாணவர் என்று அவர் எண்ணிவிட்டால் அவர்களுக்கு அவர் உதவியது இருக்கிறதே அதற்கு எல்லையே கிடை யாது. இப்படிப்பட்ட ஒரு மனிதரை நாம் வாழ்க்கையி லேயே பார்க்கவே முடியாது. தமிழ் இலக்கிய வரலாற்றை அவருடைய ஊக்கத்தால்தான் நான் எழுதினேன். நான் அப்பொழுது இருபத்தோரு வயதுப் பையன். அவர், பாரி நிலையத்தாரிடம் எனக்கு நீங்கள் என்ன ராயல்டி