பக்கம்:மு. வ. வின் சிந்தனை வளம்.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர். சி.பா. 73

கொடுப்பீர்களோ அதே ராயல்டியை இந்தப் பையனுக்கும் கொடுக்கவேண்டும் என்று என்னை வைத்துக்கொண்டே “போனில்” அவர்களிடம் பேசினார்கள். இப்படிப்பட்ட மனநிலை எவருக்கும் எளிதில் வராது, மிக உயர்ந்த பண்பாடுடையவர்களெல்லாம் அவரோடு பழகியிருக் கிறார்கள் இதனால் அவரது சிந்தனையில் தெளிவு இருந்தது. அவரது சிந்தனையில் குறைபாடே இல்லா திருந்தது. அதற்கும் மேலே அவருடைய சிந்தனையால் பயன் விளைந்தது. அவர் ஒன் சொன்னால் அது அப் படியே நடக்கும்; அப்படிப்பட்ட ஒரு இந்தனை வளம் அவரிடத்திலே இருந்தது.

முதல் சிந்தனை அவர் இந்த உலகத்திற்கு ஒரு பெரிய தத்துவத்தைக் கொடுத்திருக்கிறார். எவரும் எண்ண முடியாத, ஆனால் மிகச்சிறந்த ஒரு தத்துவம் அது. அதனை எண்ணினால் வாழ்க்கையில் நிம்மதியாக வாழலாம்.

“இன்பத்திற்குத் துணையாக யாராலும் முடியும்: ஈ எறும்பாலும் முடியும். தேவையானது இடைக்கும்போது ஈயும் எறும்பும் நம்மைக் கேளாமலே மொய்க்கின்றன. அதுபோல் இன்பம் உள்ளபோது யார் வேண்டுமானாலும் வந்து மொய்த்துக்கொள்வார்கள். ஆகையால் இன்பத் திற்குத் துணையாக வல்லவரை நம்பாதே, துன்பத்தி ற்குத் துணையாக இருக்கவல்லவரைத் தேடு. உறவானாலும் நட்பானாலும் காதலானாலும் இப்படித்தான் தேட வேண்டும்.”

-அல்லி. ப. 124

நீ விரும்பியது கிடைக்கவில்லை என்றால்

கிடைத்ததை விரும்பவேண்டும்"