பக்கம்:மு. வ. வின் சிந்தனை வளம்.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 டாக்டர். மு.வ,வின் சிந்தனை வளம்

என்று சொல்வார். இன்றைக்கு, பலர் தம் வாழ்க்கையில் தான் விரும்பியது கிடைக்கவில்லை என்று சொன்னால் தற்கொலை கூடச் செய்துகொள்கிறார்கள். இதனை அவர் சாடி எழுதுகிறார்.

இக் கருத்தினை அல்லி என்ற பாத்திரத்தின்வழி செ ால்லியிருக்கிறார்.

“துன்பந் துணையாக நாடின் அதுவல்லது

இன்ப முண்டோ வெமக்கு”

-கலித்தொகை: பாலைக்கலி: 5: 10-11

இந்தக் கலித்தொகைக்கு வடிவம் கொடுக்கிறார். ஆகவே மனத்திலே பதிகிறவகையிலே தத்துவங்களை, சிந்தனை களை நமக்கு எடுத்துச் சொல்கிறார். இதற்கும் மேலே, இந்த நூற்றாண்டிலே பெண் உரிமையை வாழ்த்திப் பேசியவர்கள் பாரதியார், பாரதிதாசனார், திரு. வி.க., மு.வ. பின்னாலே பேரறிஞர் அண்ணா போன்றோர் வருகின்றார்கள். ஏன் என்றால் இவர்கள் பெண்ணுக்குப் பெருமை சேர்க்கவேண்டும், பெண்ணுக்குச் சிறப்புத் தரவேண்டும் என்று பேசியவர்கள். அப்படிப் பேசுகிற பொழுது அவர்களிடத்திலே ஒர் உணர்ச்சி இருக்கும். இங்கே பார்க்கிறபொழுது ஒரு பெண்ணுக்குக் கோபம் வருகிறது. சமுதாயத்தைப் பற்றி ஒரு கேள்வி. அவருடைய எழுத்தில் பார்க்கிறபொழுது எவ்வளவு உணர்வு, எவ்வளவு ஆழம் இருக்கிறது என்பதை நாம் பார்க்கலாம்.

ஒரு நாள் மொழிநூல் வகுப்பு நடத்திக்கொண்டிருந்த

பொழுது,

“அன்றியும் தமிழ் நூற்கு ஒர் அளவில்லை

ஐந்தெழுத்தால் ஒரு பாடையென்று

அறையவும் நாணுவர் அறிவுடையோரே"