பக்கம்:மு. வ. வின் சிந்தனை வளம்.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர். சி.பா. - 75

என்று குறிப்பிட்டுள்ள சுவாமிநாததேசிகர் தமிழில் என்ன இருக்கின்றது; அ, இ, உ, எ, ஒ இந்த ஐந்து எழுத்துக் களைத் தவிர வேறு என்ன இருக்கின்றது. இதைப்போய் உயர்தனிச் செம்மொழி என்று கூறுகிறார்களே, இதில் என்ன சிறப்பு இருக்கின்றது? என்று குறிப்பிட்டுள்ளார். உடனே அவரது கண்கள் இரண்டும் சிவந்துவிட்டன. “தமிழ் நாட்டின் சோற்றையும் பருப்பையும், நெய்யையும் தின்றுகொண்டு இப்படி எழுதியுள்ளாரே இப் பெரியவர் என்று அன்றைக்கு முழுவதும் ஒரே கோபமாக இருந்தார். இப்படித் தமிழ்மொழியில் பேசிய ஒருவர் சொன்னாரே என்று கோபப்பட்டார்.

இளங்கோவடிகளைத் தமிழர், கலைஞர், அறவோர் என்ற மூன்று தலைப்புகளிலே கண்டவர் அவர். இளங்கோ வடிகள் மூன்று காண்டங்களின் பெயராக மூன்று தலை நகரங்களின் பெயரினை வைத்ததன் வாயிலாகச் சேர, சோழ, பாண்டிய நாடுகளின் தலைநகரங்கள் ஒன்றுபட்டு இருக்கவேண்டும் என்று நினைத்தார். இந்த மூன்று தமிழரசும் ஒன்றாக இருக்கவேண்டும்; தமிழர் என்ற உணர்வுடன் இருக்கவேண்டும் என்று எண்ணினார் இளங்கோவடிகள். ஆகையினால்தான் இளங்கோவடி களையே அவர் கனவுகண்ட முதல் தமிழன் எனலாம்.

‘குடவாயில் கோட்டத்து அரசு துறந்து இருந்தாலும் கூட அந்தத் தமிழனுக்கு, அந்தச் கலைஞனுக்கு, அந்தக் கவிஞனுக்கு, தமிழன் ஒன்றாக வாழவேண்டும் என்ற எண்ணம் இருந்தது. இது முதல் நிலை.

அடுத்து,மிகப்பெரிய பகுத்தறிவாளர் கூடச் சோதிடர் இடத்திலேயே போய்ச்சோதிடம் கேட்பது என்பது

இன்றைக்கும் இருக்கின்ற ஒரு பழக்கம். அந்தச் சோதிடம்