பக்கம்:மு. வ. வின் சிந்தனை வளம்.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 - டாக்டர். மு.வ.வின் சிந்தனை வளம்

ஒரு பெண்ணினுடைய வாழ்க்கையை எப்படித் துன்பப் படுத்துகிறது, அவலப்படுத்துகிறது என்பதை எண்ணுகிற பொழுது சொல்கிறார்:

“பெற்று வளர்த்துப் பாராட்டிச் செல்வ மகள் என்று போற்றிய அதே பெண்ணை எவனோ ஒருவன் ஒரு பழம் பஞ்சாங்கத்தைப் புரட்டிச் சொன்னதைக் கேட்டு, அன்றுமுதல் சனியன் என்றும், தரித்திரம் என்றும் பேசுவதா? அவ்வாறு சொன்னவன் சனியன்: அதைக்கேட்டவர் சனியன்; அந்த நம்பிக்கை சனியன், இந்தச் சனியன் தொலைந்தால்தான் வீடு சீர்ப்படும் குடும்பம் சீர்ப்படும்! இந்தச் சோதிடத்தை எல்லாப் பைத்தியக்காரிகளும் நம்புகி றார்கள்” இது மு.வ. வினுடைய கருத்து. இன்னோர் இடத்திலே அவர் சொல்வார். “ - - ,

“இந்தக் காலத்தில் ஐந்து ஆறு குழந்தைகளைப் பெ ற்ெ றடுத் தவளைக் கண்டா ல் தெய்வம் என்று கையெடுத்துக் கும்பிடலாம்”

என்பார். ஐந்தாறு பிள்ளைகளைப்பெற்று, அவர்களைத் தம்முடைய வாழ்நாளில் ஒழுங்காக-செம்மையாக வளர்த்த பெண்மணியைக் கண்டால் கையெடுத்துக் கும்பிடுவேன் என்று சொல்கின்றார்.

அவர் இதற்கும்மேலே ஒருபடிசென்று ஒரிடத்தில் எல்லாவற்றையும்விட இயற்கைதான் சிறந்தது என்று சொல்கின்றார். இதிலே அவருக்கு அசைக்கமுடியாத நம்பிக்கை இருந்தது. இறைவனுக்கு அடுத்த நம்பிக்கை இயற்கையிடம் அவருக்கு இருந்தது.