பக்கம்:மு. வ. வின் சிந்தனை வளம்.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர். சி.பா. 77

“நோயை உண்டாக்கியது இயற்கை. நோயைத் தீர்க்கும் ஆற்றலும் அதற்கு உண்டு. நல்ல காற்று, வெளிச்சம், தட்பவெட்பமாறுதல் இவைகளுக்கு இருக்கும் வல்லமை எந்த டாக்டருக்கும் இல்லை” என்று அவர் எழுதுகிறார்.

ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்டிருந்த டாக்டர் மு.வ. அவர்கள் பழியும் பாவமும்’ என்ற நாவலில் ஒரு கருத்தைச் சொல்லியிருக்கின்றார்கள்?.

“முந்நூறு நானுாறு பேர், மூவாயிரம் நாலாயிரம் பேர் வரவேண்டும் என்றும், முழுதும் தெரிந்தவர்கன் அரை குறையாய்த் தெரிந்தவர்கள் அத்தனைபேருக்கும் அழைப்பு அனுப்பி அனைவரும் வரவேண்டும் என்றும் முயல்வது ஒரு பெரிய ஆடம்பர மூடநம்பிக்கை’

‘திருமணத்திற்கு வருமாறு எல்லோருக்கும் அழைப்பு அனுப்பி வற்புறுத்தும் மூடவழக்கம் தொலைய வேண்டும்’ என்ற ஒரு கருத்து சொல்கிறார்.

மு.வ. அவர்கள் தம் வாழ்க்கை வரலாற்றை எழுத எவருக்கும் அனுமதி தரவில்லை. அவருடைய வாழ்க் கைக் காலத்திலே, அவரோடு நான் உரையாடிக் கொண் டிருந்த காலத்திலே அவருடைய வாழ்க்கை நிகழ்ச்சிகளை நான் எழுதுகிறேன். அதற்கு அனுமதி தாருங்கள் என்று கேட்டிருக்கின்றேன். அதற்கு அவர் இடம் தரவில்லை. அதற்கு ஒரு காரணம் சொன்னார். இந்த உலகத்தில் சான்றோர்களை ஒரு பெரிய கடல் என்று எடுத்துக் கொண்டால், அதிலே நம்முடைய வாழ்க்கை என்பது ஒரு சிறு துளி. அதை ஒப்பிட்டுப் பார்த்தால், இந்தச் சிறு திவலைக்கும் ஒரு வரலாறு வேண்டுமா?’ என்று கேட்பார்,