பக்கம்:மு. வ. வின் சிந்தனை வளம்.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 டாக்டர். மு.வ.வின் சிந்தனை வளம்

யில் டாக்டர் மு.வ. அவர்களின் இலக்கிய வளம் அந்தக் காலகட்டத்தில் மிகச் சிறப்பாகத் துவங்கியிருந்திருக் கின்றது ஏறத்தாழ இருபத்து நான்கு இலக்கிய நூல்களை எழுதியிருக்கும் டாக்டர் மு. வ. அவர்களுக்கு இலக்கியத் தின்பால் அதிலும் குறிப்பாகச் சங்க இலக்கியத்தின்பால்’ தணியாத காதல் உண்டு. அதனால்தான் பெரும் பள்ளி இறுதித் தேர்வை (எஸ்.எஸ்.எல்.சி.) முடித்து தாலுக்கா அலுவலகத்தில் எழுத்தராகப் பணியைத் தொடங்கிய டாக்டர் மு.வ. அவர்கள் தாமே தமிழ் படித்து வித்துவான் தேர்வு எழுதித் திருப்பனத்தாள் காசிமடத்தின் கொடை யால் ஐந்தாம் ஜார்ஜ் அரசர் பெயரால் வழங்கப்பெறும் நினைவுப் பரிசாகிய ஆயிரம் ரூபாய்ப் பரிசினைப் பெற்றுத் தேர்ந்தார். திருப்பத்துரில் உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியினை ஏற்றார். அவற்றிற்கெல்லாம் அவருடைய தமிழ்த் தோய்வே-தமிழிலக்கிய ஈடுபாடே காரணம் எனலாம்.

அவர் பிறந்த ஊர் சென்னை-பெங்களுர் செல்லும் புகை வண்டிப் பெரு வழியினிடையே வாலாசாப்பேட்டை என்னும் ஊருக்கு வடக்கே நான்கு கல் தொலைவில் அமைந்திருக்கும் வேலம்’ எனும் சிற்றுாராகும். இந்தச் சிற்றுாரைக் குறித்து எங்கள் ஊர் : வேலம்’ என்ற தலைப்பில் 8-8-1969, ஆனந்த விகடனில் அவர் எழுதி யுள்ள கட்டுரையில் இலக்கிய மணம் இனிது கமழக் காண

GUfTLD

‘ஆர்க்காட்டில் இருந்து ஐந்தாவது மைலில் சோளிங்கபுரம் ோகும் சாலையில் அமைந்த கிராமம் அது. ஊரின் முகப்பிலேயே ஒரு நல்ல குளம் (ஊருணி) அமைந்து அழகான காட்சி தருகிறது. அதன் உயர்ந்த கரையின் மேட்டில் ஆலமரங்கள் பல சூழ்ந்து விளங்