பக்கம்:மு. வ. வின் சிந்தனை வளம்.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 டாக்டர். மு.வ. வின் சிந்தனை வளம்

அவர்தம் வாழ்க்கைக்குப்பின் அவருடைய வாழ்க்கை வரலாற்றை எழுத நம்முடைய குடும்பத்தை நன்கு அறிந்த உங்களால்தான் முடியும் என்று அவருடைய மூத்த மகனார் டாக்டர் அரசு என்னிடம் கேட்டுக் கொண்டபிறகே நான் அவர்தம் வரலாற்றை எழுதித்தர ஒப்புக் கொண்டேன். -

“ஞாலம் நின்புகழே மிகவேண்டும்

தென்ஆலவாயில் உறையும் எம் ஆதியே”

-திருஞானசம்பந்தய

என்பது தேவாரம். இந்த உலகத்திலே ஒரே ஒருவர் புகழே பேசப்படவேண்டும். அது மதுரையில் இருக்கக் கூடிய சொக்கநாதப்பெருமான் புகழை மட்டுமே பேச வேண்டும் என்று சொல்வதுபோல, நாம் எப்பொழுதும் இறைவனுடைய புகழையே பேசவேண்டும். நம்முடைய புகழ் பேசப்படக்கூடாது அப்படிப் பேசப்பட்டால் அது ஆணவமாகிவிடும், செருக்காகிவிடும், என்பார்.

இந்த அடிப்படையில் நாம் எண்ணிப் பார்க்கிற பொழுது அவருடைய சமயம் தெளிவாகிறது. அந்தச் சமயம்தான் திருநாவுக்கரகருடைய சமயம். இதை அவர் அடிப்படையிலே சொல்வார்: “சடங்குகளே நம்முடைய வாழ்க்கை வழிபாடாய் ஆகிவிட்டன. இந்தச் சடங்குகளே எனக்குப் பிடிக்காது. இது வழியே தவிர முடிவாகாது. இறைவன் என்பதுதான் முடிவு. நாம் சடங்குகளிலேயே காலம் கழித்துக்கொண்டிருக்கின்றோம். சடங்குகள் சமயம் ஆகாது” என்பார். இதிலே மிகத் தெளிவான எண்ணம் உடையவர். அப்படையிலே ஆழ்ந்த சமயம்உண்மையான சமயம் என்பது இதுதான் என்று நாம் உணரலாம். அதற்கும்மேலே அவர் தெளிவாகச் சொல்கிற