பக்கம்:மு. வ. வின் சிந்தனை வளம்.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர். சி.பா. o 79

பொழுது அவருடைய தெளிந்த கருத்தை, சமயங்களைப் பற்றி அவர் சொல்லுகின்ற கருத்தைப் பின்வரும் பகுதி கொண்டு அறியலாம்.

‘சமயங்களின் பெயரால் கோயில்களிலும் வீடுகளிலும் நடத்தப்படும் சடங்குகள் எல்லாம் சடங்குகளே என்று உணரவேண்டும். கடவுள் நெறிக்குப் பயன் படும் என்று முன்னோர்களால் அவ்வப்போது ஏற்படுத்தப்பட்டவை அந்தச் சடங்குகள், சடங்கு களே முதன்மையானவை என்று நம்பிவிடக்கூடாது. சடங்குகளைச் செய்வதே போதும் என்று எண்ணி விடல் ஆகாது. மன ஒருமைப்பாட்டுக்கும் பண் பாட்டுக்கும் உதவும் என்றுமுன்னோர் சிலர் ஒவ்வொரு குழுவார்க்கும் சடங்குகள் சிலவற்றை ஏற்படுத்தித் தந்தார்கள். அந்தச் சடங்குகள் எல்லார்க்கும் தேவை என்றோ, எல்லாக் காலத்திற்கும் தேவை என்றோ வற்புறுத்தக்கூடாது. அவ்வாறு வற்புறுத்துவதால் நாத்திகம் (கடவுள் மறுப்பு) பெருகுமே தவிர வேறு பயன் விளையாது. சமயங்களில் நல்ல உண்மைகள் இருந்தபோதிலும் பொய்ம்மை பெருகியதற்கு அத்த கைய வற்புறுத்தலே காரணம் ஆகும். கடவுள் நெறிக்கு உதவும் வழிவகைகள் என்று ஏற்படுத்தப் பட்டவைகளே தவிர, அவைகளே கடவுள் நெறி அல்ல. சமயங்களில் வழிவழியாக வந்த வேடங்களும் அப்படிப்பட்டவைகளே. அவற்றை விரும்புவோர் கொள்ளலாம்; விரும்பாதவர் விடலாம். வற்புறுத்தல் கூடாது. அவரவர் மனம் வளர்ந்த வளர்ச்சிக்கு ஏற்ற வாறு அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளலாம். அல்லது அப்பால் செல்லலாம். அவைகளுக்கு முதன்மை கொடுப்பதால் மக்களிடையே பிளவும்