பக்கம்:மு. வ. வின் சிந்தனை வளம்.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 டாக்டர். மு.வ.வின் சிந்தனை வளம்

பூசலும் வளர்ந்து சமுதாயம் தேங்கி நிற்பதை வரலாறு உணர்த்துகிறது. ஆகையால் கடவுள் நெறிக்குத் தவிர வேறு எதற்கும் முதன்மை தரல் ஆகாது!”

அதனால் அவருடைய ஆழ்ந்த கருத்து, இன்றைக்கு மக்கள் கடவுள் நெறியை மறந்துவிட்டு சடங்குகளிலேயே காலம் கழிக்கிறார்கள் என்பதாகும். சடங்குகளின் வழிமுறைகளிலேயே காலத்தைக் கழிக்கிறார்கள். ஆண்டவ னிடத்திலே உள்ளம் செல்லவில்லை. அப்படிச் செல்வதற்கு என்ன வழி: மிகப்பெரியவர்கள் தம்முடைய வாழ்க்கை யிலே சொல்லியிருக்கிறார்கள்.

“நடமாடும் கோயில் நம்பர்க்கு ஒன்றியின்

படமாகுங் கோயில் பகவற்கங் காகும் படமாடுங் கோயில் பகவற்கொன்றியின் நடமாடுங் கோயில் நம்பர்க் கொன்றாகா.

-திருமந்திரம்.

இங்கே ஒரு தரித்திர நாராயணனுக்குக் கொடுத்தார்கள் என்றால் ஆண்டவனுக்குக் கொடுத்ததுபோல. ஆனால் ஆண்டவனிடத்திலே கொண்டு கொடுத்துவிட்டால், அது நடமாடும் கோயிலுக்குப் போய்ச் சேரும் என்று சொல்ல முடியாது. இதைவிடப் பெரிய தத்துவம் சொல்ல முடியாது.

ஒர் ஏழைக்கு இரங்கி உதவி செய்; அது ஆண்டவனை வழிபடுவதுபோல ஆனால் ஆண்டவனை நான் நாள் தோறும் வழிபடுகிறேன். பதினாறு பூசைகள் செய்கிறேன். என்றால் அதிலேயே நிற்காதீர்கள். அந்த நெறிகளிலேயே பற்று வைத்துக்கொண்டு போங்கள்” என்கிறார்.