பக்கம்:மு. வ. வின் சிந்தனை வளம்.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- : . శీ - é # டாக்டர். சி.பா. si

அதற்கு மேலே வாழ்க்கைக்கு ஒரு விளக்கம் தருகிறார்.

“நம்முன்னோர்களைப் போல் அவ்வளவு அமைதியாக இன்பமாக நாம்வாழமுடியவில்லை.பல வகைகளிலும் நமக்கு உதவிவருகிற அறிவியல் நம் வாழ்க்கையின் அமைதிக்கு அவ்வளவாக உதவி செய்யவில்லை, இயற்கை வளம் மிகுந்து செல்வம் கொழிக்கும் நாடுகளிலும் மக்களின் வாழ்க்கையில் குறை பல இருந்துவந்திருக்கின்றன. வறுமை மிகுந்து உள்ள நாடுகளில் உள்ள குறைகளைச் சொல்லத் தேவையில்லை. ஆகவே பல வகைகளிலும் முன்னேறி யுள்ள இந்தக் காலத்தில் வாழும் வழி மட்டும் இன்னும் தெளிவாக அமையவில்லை என்றும் தெரிகிறது. அதற்கு

வாழ்க்கையில் அன்பு வேண்டும், அருள் வேண்டும், உண்மை வேண்டும், நன்றி உணர்வு வேண்டும், என்றெல் லாம் சான்றோர்கள் அறிவுறுத்தினார்கள். இவையெல்லாம் இன்றைக்கும் நீங்கள் பார்க்கலாம்.

‘திருக்குறள் முதலான நீதிநூல்கள் இவற்றைத் தெளி வாக உணர்த்துகின்றன. ஆனால் அறிவு என்பதன் விளக்கங்களை மனம் நம்புவதுபோல இந்த அறநெறியை, வாழ்க்கை நெறியை நம்புவதில்லை. வானத்திற் பறக்கும் விமானத்தைப் பற்றியோ வானொலிப் பெட்டியைப் பற்றியோ, சந்திரமண்ட லங்களுக்குச் சென்று வரும் கருவியைப் பற்றியோ, அறிவியல் விளக்கம் சொன்னால் மனம் இயல்போடு கேட்கிறது; நம்புகிறது; பணிகிறது. ஆனால், கடவுள் ஒவ்வொருவருக்கும் ஓர் உடம்பைத் தந்து உடம்புக்குள் நற்பொருள்களைப் படைத்து மனத்தையும் படைத் திருக்கிறார். இந்த உடம்பைக் கொண்டு வாழ்வதற்கு உலகத்திலே ஒரு சிறுபகுதியையும் ஒவ்வொருவருக்கும்