பக்கம்:மு. வ. வின் சிந்தனை வளம்.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82

டாக்டர். மு.வ.வின் சி ந்தனை வளம்

தந்திருக்கிறார். புலன்களைக் கொண்டும், மனத்தைக் கொண்டும் இன்ப துன்பங்களை உணரும் உணர்வை யும் இன்பத்தை நாடும் வேட்கையையும் அமைத் திருக்கிறார். முன்னும் பின்னும் நாடி, நல்லதும் தீயதும் பகுத்தறிவதற்குரிய அறிவையும் கொடுத் திருக்கிறார். இத்தனையும் கொண்டு மனிதன் வாழும் வாழ்வில் அளவு அறிந்து நெறி அறிந்து வாழ்ந்தால் அமைதியாக இன்பமாக நெடுங்காலம் வாழலாம். அவன் அளவு அறியாமலும் நெறி அறியாமலும் வேக மாக வாழ்ந்தால்; மனம்போன போக்கில் வாழ்ந்தால் பெற்ற உடம்பும் விரைவில் கெடும்; புலன்களும் பாழ் படும், மனமுங் கலங்கும் அறிவும் தடுமாறும். இது தான் அவர் வாழ்க்கைக்குத்தேருகிற விளக்கமாகும்.

ஆக, வாழ்க்கையிலே அன்பு, அருள், நன்றி யுணர்வு இவையெல்லாம் வேண்டும். இந்த அடிப் படை உணர்வை நாம் பெற்றிருந்தால் வாழ்க்கை யில் நன்றாக இருக்கலாம்.

அதனாலே, ஐந்து சாதி ஆண்களையும் ஐந்து சாதிப்பெண்களையும் அவர் படைக்கிறார்.

“ஆண்களில் ஐந்து சாதிகள்: மனைவியே தெய்வம் என்று, சொன்னபடி கேட்டு மனைவிக்கு அடங்கி நடப்பவன் முதல் சாதி. குடும்பத்தில் பற்றும் தொழில் நிலையத்தில் தாமரை இலைத் தண்ணிர் போன்ற மனப்பாண்மையும் உடையவர்கள் இரண்டாவது சாதி.

குடும்பத்தில் பற்றில்லாதவர்; வெளியே ஒருத்தியிடம் அல்லது சிலரிடம் காதல் கொள்பவர்கள்.