பக்கம்:மு. வ. வின் சிந்தனை வளம்.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர். சி.பா. 83

திருமணம் செய்து கொள்ளாமலேயே உண்மையான பிரம்மச்சாரிகளாக வாழ்கிறவர்கள் அடுத்த சாதி யினர்.

திருமணம் செய்துகொள்ளாமல் மனம்போன போக் கில் வாழ்க்கை நடத்துபவர்கள் ஐந்தாம் சாதி.”

இப்படி ஆண்களில் ஐந்து சாதிகள். அடுத்து, பெண்களில் ஐந்து சாதிப் பெண்களைப் பற்றிக் குறிப் பிடுகிறார் : -

உலகத்தில் ஐந்து சாதிப் பெண்கள் உள்ளனர். இது பிறப்பால் அமைந்த பாகுபாடு அல்ல. மனத்தால் வாழ்வின் போக்கால் அமைந்த பாகுபாடாகும். ‘பழங்காலத்துத் தமிழ்ப் பெண்கள்போல் குடும்பமே உலகமாய், கணவனே தெய்வமாய் அடக்கத்தோடு வாழும் பெண்கள் ஒருவகை.

சமையலறையிலும், குழந்தைத் தொட்டிலிலும் தங்கள் இன்பத் தொழிலைக் காண்பவர்கள் ஒரு சாதி. படிப்புக்கேற்ற தொழில் வேண்டுமென்று தேடி குடும் பத்தில் பாதிவாழ்வும் தொழில் செய்யும் இடத்தில் பாதி வாழ்வும் வாழ்கிறவர்கள் அடுத்தசாதி. ஆனால் மானத்தில் பழங்காலப் பெண்களைப்போல் குடும்ப வாழ்வில் விருப்பம் உள்ளவர்கள் இவர்கள். குடும்பத்தில் பற்று கொண்டு வெளி வாழ்வில் தாமரை இலைத் தண்ணிர் போல் பற்றில்லாமல் வாழ்பவர்கள் ஒருவகை.

திருமணம் ஆகிவிட்டதே இனிமேல் விலக வழி இல்லையே என்று குடும்பத்தில் வாழ்க்கை நடத்தி