பக்கம்:மு. வ. வின் சிந்தனை வளம்.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 டாக்டர். மு.வ.வின் சிந்தனை வளம்

வெளி உலகத்தில் ஆர்வம்மிகுந்த பெண்கள். குடும் பத்தில் அவர்கள் தாமரை இலைத் தண்ணிர்போல் பற்றில்லாமல் வாழ்வார்கள். ஆனால் தொழில் நிலையம், தோழமை உலகம், பொழுதுபோக்கு நிலையம் முதலியவற்றில் ஆர்வமாக இருப்பார்கள். கணவனைப் பெயரளவுக்குக் கொண்டிருப்பார்கள். அல்லது சட்டத்தின் அளவிற்குச் சட்டை செய் வார்கள்.

சில பெண்கள் திருமணம் வாய்க்காது வாழவேண்டி யிருக்கிறது. சிலர் திருமணம் கூடிவந்தாலும் வெறுத் துத் தள்ளிவிடுகிறார்கள். இவர்களில் பலர் உலகப் பழிக்கு அஞ்சி, கன்னிப் பெண்களாகவே ஒழுக்கத் தோடு வாழ்ந்து சாகிறார்கள். இவர்கள் நான்காவது வகை.

சிலர் ஒழுக்கத்தைப் பற்றிக் கவலைப்படாமல் மனம் விரும்பியபடி வாழ்கிறார்கள். இவ்வாறு ஒழுக்கத்தில் பற்றில்லாமல் வாழ்கிறவர்கள் ஐந்தாம் சாதி.”

இப்படிச் சொல்லிவிட்டு நகைச்சுவையோடு ஒன்று சொல்கிறார்.

கலப்புத் திருமணத்தை நான் வற்புறுத்துபவன். ஆனால் ஒன்றே ஒன்றில் கலப்பு இருக்கக்கூடாது. “இப்படித்தான் வாழவேண்டும் என்கிற ஒரு சாதி, எப்படியும் வாழலாம் என்கிற ஒரு சாதி இந்த இரண்டிற்கு மிடையிலே கலப்புத் திருமணம் இருக்கக் கூடாது.

இந்த ஒரு வகையிலே அந்த வாழ்க்கையை ஆழ்ந்து பார்க்கிற ஒர் எண்ணம் இருந்தது. அதனாலேதான்