பக்கம்:மு. வ. வின் சிந்தனை வளம்.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவருடைய கடித இலக்கியங்களை நாம் நோக்கும் பொழுது, இந்தக் கடித இலக்கியங்களிலே சிந்தனையி னுடைய மணிமுடியை நாம் பார்க்கலாம். ஆனால் அதைத் தமிழர் பின்பற்றுவதில்லை. ஏனென்றால், நூல்களைப் படிக்கின்ற வேட்கை, உலகத்திலேயே தமிழகத்தில்தான் குறைவு. -

அடுத்து ஒரு கருத்தைச் சொல்கிறார் :

“நல்ல வளமாக வாழவேண்டுமென்று சொன் னால் முதலில் என்னவேண்டும்? உடல் நோயற்று இருப்பது முதல் இன்பம், மனம் கவலையற்று இருப்பது இரண்டாவது இன்பம், உயிர் பிறர்க்கு உதவியாக வாழ்வது மூன்றாவது இன்பம். இந்த மூன்றும் இருக்கிற பொழுதுதான் அந்த வாழ்க்கை மிகச் சிறந்த வாழ்க்கையாக அமைகின்றது” என்பது அவருடைய எண்ணம்.

குடும்ப வாழ்க்கையைப் பற்றி, குடும்பம் எப்படி அமையவேண்டும் என்பது பற்றிச் சொல்கிறபொழுது:

“வீட்டைத் துறப்பது, செல்வத்தை வழங்குவது, உயிரைக் கொடுப்பது இவைகளும் தியாகம்தான். ஆனால், அன்பானவர்கள் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழும் தியாகம்தான் பெரிய தியாகம்.” எல்லாவற்றையும்விட இந்த உலகத்திலே மு.வ. விரும்பியது என்று அவருடைய வாழ்க்கையைப் பார்த்து, அவருடைய பேச்சையும் பார்த்து, அவருடைய எழுத்தையும் பார்த்துச் சொல்லத் தக்கது கணவன் மனைவியும் அன்பால் இணைந்து வாழ்

சி. -6