பக்கம்:மு. வ. வின் சிந்தனை வளம்.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 டாக்டர். மு.வ.வின் சிந்தனை வளம்

வதனைக் காண்பதிலேதான் பேரின்பம் என்கிறார், மு.வ. அன்பாக வாழவேண்டும்; விட்டுக்கொடுத்து வாழவேண்டும். பிணங்கி வாழக்கூடாது என்பதிலே அவருக்கு வேட்கை மிகுதியாக இருந்தது. அவ்வாறு விட்டுக்கொடுத்து வாழும் பெருந்தன்மை இல்லா விட்டால், கணவன் மனைவி கூடி வாழமுடியாது. எவ்வளவு அன்பு இருந்தாலும், போரும் பிணக்கும் வளருமே தவிர அன்பும் அமைதியும் வளர முடியாது. அதனால் கணவனும் மனைவியும் கற்கவேண்டிய முதல் பாடம் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுப்பது தான். அதுவே கடைசிப் பாடமுமாகும். ஆக, விட்டுக் கொடுத்தல் என்கிற ஒன்றுதான் மிகச் சிறந்த ஒன்று என்று சொல்லலாம். கி.ஆ.பெ. விசுவநாதன் அவர்கள், ‘அடக்கிப் பார் அல்லது அடங்கிப்போ’ என்று சொல் வார்கள். மு.வ. அவர்களுடைய வாழ்க்கையில் பல முறை சொல்வார்கள்; நீ பிறரை ஒதுக்காதே.ஆனால் ஒதுங்கிப் போய்விடு’ என்று. மேலும், தம்முடைய வாழ் நாளிலே எதற்கும் மறுப்புக் கொடுக்க மாட்டார். காரணம், தம்முடைய ஆற்றல் அதிலே வீணாகிவிடும் என்ற எண்ணம் கொண்டிருந்தார். குடும்ப வாழ்க் கையில்மூன்றாவது பேர் நுழையக்கூடாது என்பதிலே அவருக்கு ஆழ்ந்த அக்கறை இரு ந் த து. தன்னுடைய இல்லற வாழ்க்கையிலே மூன்றாவது பேருக்குத் தெரியாமல் எவன் ஒருவன் நடத்து கிறானோ அவன்தான் வாழ்க்கையில் வெற்றியடை பவன் என்று கருதுவார்.

அதற்கு முடிமணியாக, முடிப்பதற்கு முன்னாலே அவர் குறித்த பெரிய செய்தி தீங்கு செய்தவருக்குக் கூட அவர் தீங்கு செய்ததில்லை என்பதுதான்.

4- - - - - -