பக்கம்:மு. வ. வின் சிந்தனை வளம்.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அடிப்படையிலே மு.வ. அவர்கள் என்ன எண்ணி னார்கள் என்று பார்க்கும்பொழுது, பறவைகள் விலங்குகள் மகிழ்ச்சியாக வாழ்கின்றன. அவைகளைவிட அறிவுடைய மனித இனம் ஏன் அமைதியாக வாழமுடிவதில்லை? என்று கேட்டுவிட்டு, அவைகளுடைய வாழ்க்கையில் வம்புப் பேச் கக்கு இடம் இல்லை. இந்த மனிதன் பேசிப் பேசியே கெட்டுப் போகின்றான் என்று அவர்கள் சொல்வார்கள்.

சமயங்களிலே, சமய ஒழுகலாற்றிலே அவருடைய கருத்துகள் என்ன? இறைவனை ஆடம்பரமாக வழிபடக் கூடாது. இது அவருடைய அசைக்கமுடியாத கருத்தாகும். இதற்கு என்ன சொல்வார் என்று பார்த்தால், தேர்த் திருவிழா நடக்கும்பொழுது மக்கள் அனைவரும் ஒரே நாளில் ஆண்டவனைப் போய்ப் பார்க்காதீர்கள். அவர வருக்கு ஏற்ற நாளில் அவரவருக்கு வசதியான நாளில் போய் ஆண்டவனைக் கும்பிட்டுவரலாம். இது அவருடைய கருத்து. இந்த எண்ணம் அவருடைய தனித்தன்மை. ஆனால் எல்லாவற்றையும்விட அவர் நெஞ்சில் நிற்பவர் திருநாவுக்கரசரே ஆவர். =

ஏனென்றால் அப்படிப்பட்ட உழவாரத் தொண்டினை இன்றுவரை உலகத்திலே யாரும் செய்யவில்லை என்பது அவருடைய அழுத்தமான கருத்தாகும்.

எண்ணற்ற சான்றோர்கள் இந்த மண்ணிலே நடந்து சென்றிருக்கிறார்கள். அவர்கள் நடந்துசென்ற மண்ணிலே நாமும் நடந்து செல்கிறோம். அதுவே நமக்குப் பெருமை. அந்தச் சான்றோர்கள் தம்முடைய சிந்தனைகளை நம் மிடையே வைத்துச் சென்றிருக்கிறார்கள். திருவள்ளுவ ருடைய சிந்தனை என்னவென்று தெரியும், தாயுமானவு