பக்கம்:மு. வ. வின் சிந்தனை வளம்.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர். சி. பா. 7

கும். குளத்திற்கும் ஊர்க்குமிடையே நீரற்ற ஒடையும் பெரிய ஆலமரமும் அரசமரமும் உள்ளன. அந்த மரங்களே ஊர்ப் பெரியவர்களுக்கு அரசியல் அரங்கம். இளைஞர்களுக்கு ஆடும் களம்; அரட்டை மன்றம்: இவை எல்லாம் ஊர்க்கு மேற்கே உள்ளன. கிழக்கே உள்ள சத்திரம் பலருக்கு ஒதுக்கிடம்; சிலருக்கு ஊர் வம்புக் கூடம். வடக்குப் பகுதியில் உள்ள தெருவில் எங்கள் வீட்டின் திண்ணை மேல் இருந்து பார்த்தால் வேலத்து மலை ஒரு மைல் தொலைவில் தெரியும். இளமையில் அந்த மலையின் உச்சிப் பகுதி மட்டுமே தெரியும் மலைக்கும் எங்கள் தெருவுக்கும் இடையே அவ்வளவு மரங்கள் அடர்ந்திருந்தன. இப்போது வீட்டிலிருந்து பார்த்தால் மலையின் முழு வடிவமும் தெரிகிறது. மரங்கள் எல்லாம் வெட்டப்பட்டுப் போயின.

“ஒரு பொருளின் உண்மையான மதிப்பு அல்லது ஒருவரின் உண்மையான சிறப்பு பெருங்கிப் பழகு கின்றவர்களுக்குத் தெரிவதில்லை”

கதையால் தமிழ் உலகளக்கவந்த மு. வ. அவர்கள் வேலத்து மலையைக் கதைக் கருப்பொருளாக்கி o எழுதுகின்றார். தம் சொந்த ஊரைத் தம் நண்பர்

ஊராக்கி உவகை கொள்கிறார்.

‘நண்பனுடைய சிற்றுார் என் உள்ளத்தைக் கவர்ந் தது. அந்த ஊரின் வளமோ. ஊராரின் வாழ்வோ என் உள்ளத்தைக் கவரவில்லை. அந்த ஊரின் அமைப்புத் தான் என் உள்ளத்தைக் கவர்ந்தது. வடக்கிலும் மேற்கிலும் மலைகள் சூழ்ந்து, வானுற ஓங்கிய மதில் சுவர்களாக நின்றன. அவற்றில் பெரிய மரங்கள் இல்லை; ஆனால் பச்சைப் பசேலென மஞ்சம் புல்