பக்கம்:மு. வ. வின் சிந்தனை வளம்.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 டாக்டர். மு.வ.வின் சிந் தனை வளம்

ருடைய சிந்தனை என்னவென்று தெரியும். அங்கே தொடங்கி இங்கே வரையிலும் அடிப்படையிலே ஒன்று தான் என்பார். திருவள்ளுவர்.

இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து கெடுக உலகியற்றி யான்’ (குறள் 1062 :)

என்பார்

பத்துக் குறட்பாக்களில் ஆண்டவனைப் பற்றியே பேசிய திருவள்ளுவர், ஒருவன் பிச்சை எடுத்துத்தான் சாப்பிடவேண்டும் என்கிற நிலை இந்த உலகத்திலே வருமானால், அவனைப் படைத்த ஆண்டவனே அழியட்டும் என்று பேசுகிறார்.

அதற்கப்பால் புறநானூற்றுக்கு வருவோம்.

தெண்கடல் வளாகம் பொதுமை யின்றி

வெண்குடை கிழற்றிய ஒருமை யோர்க்கும் நடுநாள் யாமத்தும் பகலும் துஞ்சான் கடுமாப் பார்க்கும் கல்லா ஒருவற்கும் உண்பது நாழி உடுப்பவை யிரண்டே பிறவு மெல்லாம் ஒரொக் கும்மே செல்வத்துப் பயனே ஈதல் துய்ப்பே மெனினே தப்புரு பலவே

-புறங்ானுாறு: 189.

தாயுமானவர்,

யோசிக்கும் வேளையில் பசிதீர உண்பதும் உறங்கு வதுமாய்’ என்று சொல்வார்.